கவுரி லங்கேஷ் கொலைக்குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்!

கவுரி லங்கேஷ் கொலைக்குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்!
பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் கடந்த சில தினங்களுக்கு முன் சுட்டுக்கொல்லப்பட்டார். பல்வேறு கருத்துக்களை துணிச்சலுடன் முன்வைத்து வந்த கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக விசாரிக்க உளவுத்துறை போலீஸ் ஐ.ஜி.யான பி.கே.சிங் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பி.கே.சிங் உள்பட 21 போலீஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். சிறப்பு விசாரணை குழுவினர் தங்களது விசாரணையை தொடங்கிவிட்டனர்.  கவுரி லங்கேஷின் வீட்டிற்கு சென்று சிசிடிவி கேமிரா காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கவுரி லங்கேஷ் கொலைக்குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால், ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று கர்நாடக உள்துறை  அமைச்சர்  ராமலிங்கா என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், மாவோயிஸ்டுகள் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்து வந்த கவுரி லங்கேஷ்க்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை என்று கர்நாடக அரசுக்கு மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

VIDEO : நீட் விவகாரம் : ஆசிரியை ரா

Related Posts

error: Content is protected !!