கல்லூரி முதல்வரான திருநங்கை! -மேற்கு வங்க மாநிலத்தில் நியமனம்

கல்லூரி முதல்வரான திருநங்கை! -மேற்கு வங்க மாநிலத்தில் நியமனம்

இந்தியாவில் 2012 மக்கள்தொகைக் கணக் கெடுப்பின் படி 2கோடியே 17 லட்சம் திருநங்கைகள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மிகவும் இளம் வயதிலேயே வீட்டை விட்டு ஏதாவது ஒரு வகையில் வெளியேறிவிடுகின்றனர், அல்லது வெளியேற்றப்படுகின்றனர். மேலும் திருநங்கைகள் குடும்பச்சூழலில் இருக்கும் போது அவர்களுக்கு கல்வி ஒரு வாய்ப்பாக உள்ளது. 100 பெற்றோர்களில் 4 பெற்றோர் மாத்திரமே தங்கள் வீட்டில் வளரும் மாற்றுப்பாலின குழந்தைகளை கல்வி கற்க அனுப்புகின்றனர். அப்படிச் செல்லும் குழந்தைகள் பள்ளியில் பல்வேறு துன்பங்களைச் சந்திக்கின்றனர், அக்குழந்தைகள் அதை வீட்டில் கூறாமல் மனதிற்குள்ளேயே அடக்கி வைத்துக் கொள்கின்றனர். இதுவே அவர்களாகவே சமூகத்தை வெறுக்கும் மனநிலையை ஏற்படுத்தி விடுகிறது. பல்வேறு இடர்ப் பாடுகளிடையே கல்வியை முடிக்கும் மாற்றுபாலினத் தவருக்கு வேலையோ அல்லது சுயதொழில் செய்ய எந்த ஒரு உதவியையோ எந்த ஒர் நிறுவனமும் அளிக்க முன் வருவதில்லை. இதனால் இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் 2012-13 கல்வியாண்டில் வெறும் 9 மாற்றுப்பாலினத்தவர்கள் தான் பட்டம் பெற்றுள்ளனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
colleage princi trange
உலகிலேயே முதன்முறையாக கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ள திருநங்கை மனாபி பந்தோபாத்யாய், தற்போது விவேகானந்தா சதோபர்ஷிகி மஹாவித்யாலயாவில் பெங்காலி மொழி பாடத்தின் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். வரும் ஜூன் 9 ஆம் தேதி கிருஷ்ணா நகர் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள மனாபியை, கல்லூரி பணியாளர் தேர்வாணையம் இப்பணியில் நியமித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில கல்வி மந்திரி பார்த்தா சாட்டர்ஜி, கல்லூரி முதல்வர் தேர்வை, தேர்வாணையம் வெளிப்படையாக செய்கிறது. இந்த தேர்வு விவகாரத்தில் எல்லாம் அரசு தலையிடாது. எனினும் தற்போது எடுத்துள்ள முடிவு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார். அம்மாநிலத்தின் தொழில்நுட்ப கல்வி மந்திரி உஜ்ஜால் பிஸ்வாசும், மனாபியின் நியமனத்தை வரவேற்றுள்ளார்.

கல்லூரி முதல்வர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டது குறித்து மனாபி கூறுகையில், எதிர்பார்க்காத பொறுப்பு எனக்கு கிடைத்துள்ளது. இக்கல்லூரி அமைந்துள்ள கிருஷ்ணா நகரில் இருந்து சிறிது தூரத்தில் தான், 92 வயதான என் தந்தை வசித்து வருகிறார். எனவே அவரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது என்றார்.

error: Content is protected !!