கல்லூரி மாணவர்களை வைத்து தன படத்திற்கு விளம்பரம் தேடும் சேரன்!

கல்லூரி மாணவர்களை வைத்து தன படத்திற்கு விளம்பரம் தேடும் சேரன்!

சர்வானந்த், நித்யா மேனன், சந்தானம், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்க சேரன் இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’. ‘ட்ரீம் சவுண்ட்ஸ் ‘ என்ற ஆடியோ நிறுவனம் ஒன்றை துவக்கி இருக்கிறார் சேரன். இப்படத்தின் இசையை தனது ஆடியோ நிறுவனம் மூலமே வெளியீட்டு இருக்கிறார்.இந்நிலையில் பேஸ்புக் மூலம் விநியோகஸ்தர்களை தேடி வந்தார் அல்லவா?(http://www.aanthaireporter.com/?p=2339)அதற்கு போதிய ரெஸ்பான்ஸ் இல்லாத நிலையில் தற்போது படத்தின் விளம்பரத்திற்காக கல்லூரி மாணவர்களை களமிறக்க முடிவெடுத்துள்ளார்ர் சேரன்.
25 - cine cheran.2. MINI
அதாவது ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு இரண்டுபோட்டிகள் அறிவித்திருக்கிறார்.

முதல் போட்டி : ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தில் இடம்பெறும் ஏதாவது ஒரு பாடலுக்கு நடனம், நாடகம், என ஏதாவது ஒரு நிகழ்ச்சியைத் தயார் செய்து மேடையில் நிகழ்த்திக் காட்ட வேண்டும். இது சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி,வேலூர் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது. எப்போது என்கிற விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

இரண்டாவது போட்டி : பல்வேறு பட பாடல்களுக்கு தங்களது நண்பர்களுடன் நடனமாடி அதனை YOUTUBE தளத்தில் பிரபலமாக்குவது தற்போதைய டிரெண்ட். இப்படத்தின் பாடல் ஒன்றைத் தேர்வு செய்து அது ஏற்படுத்தும் தாக்கத்தை எதாவது ஒரு வடிவில் (நண்பர்களுடன் நடனமாடியோ, குழுவாக இணைந்து ஏதேனும் நிகழ்ச்சியாக நிகழ்த்தியோ) அதனை வீடியோ பதிவில் அனுப்பி வைத்தால், தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் 3 இடங்களைப் பிடிக்கும் வீடியோக்கள் படத்தில் இணைக்கப்படும்.

இப்போட்டிகளில் தேர்வாகும் மாணவர்களுக்கு பரிசும் அறிவித்திருக்கிறார் என்றாலும் ஏற்கெனவே சினிமாவால் கேட்டு போவதாக் சொல்லப்படும் இளைய தலைமுறையை தன வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தும் போக்கை பாலா பெற்றோரும் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!