இந்தி தெரிந்தால்தான் இந்தியரா? – கனிமொழியின் காட்டத்துக்கு மத்திய அரசு பதில்!

இந்தி தெரிந்தால்தான் இந்தியரா? – கனிமொழியின் காட்டத்துக்கு மத்திய அரசு பதில்!

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லிக்கு புறப்படும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற, சென்னை விமான நிலையத்துக்குக் கனிமொழி வந்தார்.நாளை திங்கள்கிழமை டெல்லியில் உள்ள நாடாளுமன்ற துறைசார் ஆலோசனைக்குழு கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார் அவர். இதையடுத்து கனிமொழி விமான நிலையத்துக்கு வந்தபோது, அங்கிருந்த வேறு மாநிலத்தைச் சேர்ந்த சிஐஎஸ்எஃப் பெண் அதிகாரி, கனிமொழியிடம் நடந்த அனுபவத்தை எம்.பி கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவருடைய ட்விட்டர் பதிவில், ‘இன்று விமானநிலையத்தில், எனக்கு இந்தி தெரியாது. என்னிடம் தமிழிலோ, இந்தியிலோ பேசுங்கள் என்று மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரியிடம் நான் கூறியபோது, அவர் உடனே நீங்கள் இந்தியரா? என்று கேள்வி எழுப்பினார். இந்தி தெரிந்திருந்தால் இந்தியர் என்பது எப்போதிலிருந்து ஆனது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்தப் பதிவில் இந்தித் திணிப்பு என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.கனிமொழியின் ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. அவருடைய ட்விட், தேசிய அளவில் செய்திகளில் இடம் பிடித்தது.

இந்நிலையில், கனிமொழியின் புகாருக்கு விளக்கமளித்துள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படை(CISF)ட்விட்டர் பதிவில்,”இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளோம். எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் கட்டாயப்படுத்துவது மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கொள்கை கிடையாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!