“இந்திய அரசு பெரிய தவறு செய்கிறது!” By பிரகாஷ் எம்.சுவாமி

“இந்திய அரசு பெரிய தவறு செய்கிறது!” By பிரகாஷ் எம்.சுவாமி

இந்தியாவின் போக்கு மிகுந்த அபாயகரமானது. இது எதிர் மறை விளைவுகளை தான் ஏற்படுத்தும். சில ஆண்டுகளுக்கு முன்னர் சரவணா பவன் அண்ணாச்சி மகன் சிவகுமார் போலியான ஆவணங்களை கொடுத்து தன் சமையல்காரருக்கு அமெரிக்க விசா எடுக்க முற்பட்டபோது கைது செய்யப்பட்டார். சிவகுமார் செய்ததை தான் தேவயாணி செய்தார். என்ன ஒன்று சிவகுமார் தூதர் அல்ல. ஆகவே சப்போர்ட் கிடைக்கல
Edit Devayani us 19
அமெரிக்காவில் தனி நபர்கள் துப்பாக்கி வைத்து கொள்ள உரிமை உண்டு என்பதாலும் போலீஸ் காரர்களை அதிகமா சுட்டு கொல்கிறார்கள் என்பதால் டிராபிக் violations க்கு கூட விலங்கு உண்டு. அது இந்த நாட்டின் சட்டம்.
மன்ஹட்டன் ஹோட்டல் பெண் விவகாரத்தில் சிக்கி கொண்ட IMF தலைவர் பிரெஞ்சு ஜனாதிபதியாக தேர்வாகும் சமயம் கைது செய்யபட்ட போது கூட கை விலங்கு போட்டார்களே. அமெரிக்கவில் சட்டம் முன்பு அனைவரும் சமம்.

இந்தியா அரசாங்கம் பெரிய தவறு செய்கிறது. ஒரு குற்றவாளியை சட்டம் பார்த்து கொள்ளும் அதில் அரசு தலையிட முடியாது. ஒரு நாட்டின் தூதர்க்கு தவிர மற்ற துதரக அதிகாரிகளுக்கு டிப்லோமடிக் இம்முநிட்டி கிடையாது.

தேவயாணின் அப்பா ஆதர்ஷ் ஊழல் புகரில் சிக்கி அன்றைய முதல்வர் அசோக் சவான் பதவி போக காரணமானவர். அகவே சுஷில் குமார் ஷிண்டேக்கு நெருக்கம். அவர் வர போகும் லோக் சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் ரிசேர்வ் தொகுதியில் போட்டியிட மனு கொடுத்துள்ளார். இது எல்லாமே வோட் பேங்க் பொலிடிக்ஸ்.

அமெரிக்க துதர்கள் மிதான தடை, சரக்கு கட் எல்லாம் சிறு பிள்ளை தனம். ராஜீவ் காந்தி இலங்கை சென்ற பொது ஒரு சிப்பாய் அவரை தலையில் துப்பாக்கியின் முனையால் அடித்தானே அப்ப என்ன செய்தார்கள். உறவை முறிததிர்களா? மீனவர்கள் கொல்லப்படும் போதும மவுனம் தானே.?

தமிழர் ஸ்ரீ ஸ்ரீனிவாசன் வாஷிங்டன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்ற பொது பிரதமரின் மனைவி நேரில் வந்து அந்த பதவி ஏற்பு விழா கலந்து கொண்டார். தேவயாணி மீது நடவடிக்கை எடுத்த பரீத் பாரார ஒரு இந்தியர் தான். அவருக்கு என்ன மரியாதை. சட்டம் தன் கடமையை செய்யும். சுமார் 20 ஆண்டுகளாக பேணி பாதுகாக்க பட்ட நட்பு ஒரு வேலைகார பெண் விவகாரத்தில் முறியலமா? இதனால் அமெரிக்க விற்கு நஷ்டம் இல்லை அப்பு!

இதற்கிடையில் தெஹெல்க ஆசிரியர் தருண் தேஜ்பால் கைது ஆனா பொது ஒரு ஊடகம் கூட அவருக்கு பரிவு கட்டவில்லை. அவர் செய்ததை அல்லது செய்ததாக சொல்ல படுவைகளை நான் நியாயபடுத்தவில்லை ஆனால் ஊடகம் அவரை நம்ம ஆளு தானே என்று அடக்கி வசிக்கவில்லை. அவரை கொதறி எடுத்தன. அதில் எனக்கும சந்தோசமே காரணம – பத்திரிக்கை தர்மம். ஆனால் தவறு செய்த தேவயானைக்கு அனைத்து அதிகார வர்க்கமும் துணை போகிறது. IAS மற்றும் IFS ஆபீசர்கள் மல்லுகட்டி வரிந்து கட்டுகிறார்கள். அரசை மிரட்டுகிறார்கள். மறியல் மட்டும் தான் செய்யவில்லை. இந்தியாவின் அதிகார வர்க்கம் மிக பலமானது. அது நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இதுவே சான்று.

பிரகாஷ் எம்.சுவாமி

Related Posts

error: Content is protected !!