அரசியலில் பெண்கள்: இந்தியாவுக்கு 73வது இடம்!

அரசியலில் பெண்கள்: இந்தியாவுக்கு 73வது இடம்!

இந்தியாவில் மிக உயர்ந்த பொறுப்பான குடியரசுத் தலைவர் தொடங்கி தற்போதைய மக்களவை சபாநாயகராகவும், முதல்வர் களாகவும் பல பெண்கள் பதவி வகித்துள்ள நிலையிலும் இந்திய அரசியலில் பெண்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது.
நம் நாட்டில் மிகப் பெரிய பதவிகளில் பெண்களை அமரவைத்துள்ள பல கட்சிகள், தங்களது தேர்தல் வேட்பாளராக பெண்களை நிறுத்த இப்போதும் கூட அதிகம் யோசிக்கின்றன. அதிலும் தற்போதுள்ள சில பெண் எம்எல்ஏக்களும், எம்பிக்களும் கூட அவர்களது உறவினர்களின் மரணத்தைத் தொடர்ந்தோ அல்லது உறவினர் போட்டியிட முடியாத நிலையிலோதான் அத்தொகுதியில் போட்டியிட்டவர்களாகவே இருக்கின்றனர்.இந்நிலையில் உலக அளவில் உள்ள நாடுகளில் தேர்தல் உள்ளிட்ட அரசியலில் பெண்களின் பங்கேற்பு குறித்து ஐநா பெண்கள் அமைப்பு ஆய்வு நடத்தியது. இதில் 2014ம் ஆண்டில் அரசியலில் பெண்களின் பங்கு குறித்த புள்ளி விபர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாடாளுமன்ற அளவில் பெண்கள் பங்கேற்பில் இந்தியாவுக்கு 73வது இடம் கிடைத்துள்ளது.அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பது, மத்திய அமைச்சர்களாக பதவி வகிப்பது போன்றவற்றில் பெண்களின் பங்கு இந்தியாவில் வெறும் 9.9 சதவீதம் மட்டுமே உள்ளது.
women in poltics
வளர்ச்சியடையாத பிற நாடுகளோடு ஒப்பிடும் போது இந்தியா அதற்கும் கீழே உள்ளது. குறிப்பாக ஹைதி, ருவாண்டா, காங்கோ, சாத், ஜாம்பியா உள்ளிட்ட நாடுகளில் நடத்திய ஆய்வில் பெண்கள் அரசியலில் பங்கெடுப்பதில் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன.இந்தியாவில் மத்திய அமைச்சரவையில் 43 அமைச்சர்களுக்கு வெறும் 4 அமைச்சர்கள் என்ற அளவில் மட்டுமே பெண்கள் உள்ளனர். அதே போல் 188 நாடுகளின் நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர்களாக 88 பெண்கள் என்ற விகிதத்திலேயே பொறுப்பு வகிக்கின்றனர்.பாகிஸ்தான் இந்த விஷயத்தில் இந்தியாவை விட மோசம்.

இந்தியாவுக்கு அடுத்துதான் பாகிஸ்தான் உள்ளது. 17 அமைச்சர்களில் பெண்கள் ஒருவர் கூட அங்கு அமைச்சர்களாக பதவி வகிக்கவில்லை. சவுதி அரேபியா, லெபனான் போன்ற நாடுகளில் நிலைமை இன்னும் மோசம். அங்கு பெண்களின் அரசியல் பங்கேற்பு என்பது மிக மிக குறைவு.இதில் அமெரிக்காவில் நாடாளுமன்ற அளவிலான பதவிகளில் 40 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்தில் 20 சதவீதம் பெண்கள் உயரிய பொறுப்புகளில் உள்ளனர்.உலக அளவில் அமைச் சர் பதவிகளை எட்டும் பெண்களின் சதவீதம் கடந்த 2008ல் 16.1 சதவீதத்தில் இருந்து இந்த ஆண்டு 17.2 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

India is 73rd in women’s participation in politics
********************************************************************
The Women in Politics Map 2014 launched by the Inter-Parliamentary Union (IPU) and UN Women has ranked India 73rd in participation of women in politics with just 9.9% of parliamentary or ministerial posts being occupied by women****

error: Content is protected !!