ரூ.2,000 நோட்டுகள் அச்சடிக்க ‘ஆர்டர்’ கொடுக்கப்படவில்லை!- ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்!.

ரூ.2,000 நோட்டுகள் அச்சடிக்க ‘ஆர்டர்’ கொடுக்கப்படவில்லை!- ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்!.

ம் நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறி இருப்பதாவது:–

“கடந்த 2016ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, 336 கோடியே 30 லட்சம் எண்ணிக்கையில் ரூ.2,000 நோட்டுகள் இருந்தன. (இதன் மதிப்பு சுமார் ரூ.6 லட்சத்து 73 ஆயிரம் கோடி) இது, அப்போதைய மொத்த நோட்டுகளில் 3.27 சதவிகிதம் ஆகும்.

ஆனால், கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் எண்ணிக்கை 223 கோடியே 30 லட்சமாகக் குறைந்தது. இது தற்போதைய மொத்த நோட்டுகளில் வெறும் 1.75 சதவிகிதம் மட்டுமே. மக்களின் பரிமாற்றத் தேவையைப் பொறுத்து, ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி, குறிப்பிட்ட ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஒன்றிய அரசு முடிவு செய்கிறது. ஆனால், 2018-2019ஆம் நிதியாண்டில் இருந்தே ரூ.2,000 நோட்டுகள் அச்சடிக்க ‘ஆர்டர்’ கொடுக்கப்படவில்லை. மேலும், அந்த நோட்டுகள் அழுக்கடைந்ததாலும், சிதைந்ததாலும் புழக்கத்தில் இருந்து குறைந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!