ஹாதராஸ் வழக்கில் சி.பி.ஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தாகி விட்டது!

ஹாதராஸ் வழக்கில் சி.பி.ஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தாகி விட்டது!

ஹாதராஸ் வழக்கில் சி.பி.ஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. அந்தப் பெண் வன் புணர்வுக்கு உள்ளாகிக் கொலையுண்டதாக அறிக்கை உறுதி செய்கிறது. கைதான நால்வர் மேலும் கூட்டு வன்புணர்வு மற்றும் கொலைப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

இந்தச் சம்பவம் நடந்து தேசத்தையே உலுக்கிய பொழுது பா.ஜ.க அபிமானிகள் அங்கே வன் புணர்வே நடக்கவில்லை என்று கற்பூரம் அடித்துச் சொன்னார்கள். அதற்காகப் பல்வேறு மருத்துவச் சான்றிதழ்களை தூக்கிக் கொண்டு வந்து பகிர்ந்தார்கள். அந்தப் பெண் வாய்க்காலில் தடுக்கி விழுந்து மண்டையில் கூழாங்கல் அடிபட்டுச் செத்துப் போனாள் என்று மட்டும்தான் சொல்லவில்லை. மற்றபடி எல்லாமும் சொன்னார்கள். சிலர் அதைவிட மோசமாகவும் நடந்து கொண்டார்கள். அவர்களின் வழக்கமான Whatabouteryஐ கையில் எடுத்து ‘ராஜஸ்தானில் அன்று அது நடந்தது; அதைக் கேட்டாயா?’; ‘கேரளாவில் இன்று இது நடந்தது; இதைக் கேட்டாயா?,’ என்று பிலாக்கணம் பாடினார்கள். இப்போது என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரிய வில்லை.

இதற்கும் கூட ஒப்பிடுவதற்கு ஏற்றபடி மிசோரம், திரிபுரா, அந்தமான் எங்காவது நடந்த சம்பவங் கள் எதையாவது பா.ஜ.க. வின் ஐடி செல் தற்போது தேடிக் கொண்டிருக்கலாம். இன்னும் ஓரிரு மணி நேரங்களில் மீம் தயாராகி, சுடச் சுட விநியோகம் செய்யப்பட ஆரம்பித்து விடும். என்னைப் பொறுத்தவரை, உ.பி.யில் வன்புணர்வு அல்லது கொலை நடக்கிறது என்பது செய்தியே அல்ல. அது தினசரி நிகழ்வுகள்தான். ‘பார்த்தசாரதி கோயிலில் இன்று வெண் பொங்கல் தருகிறார்கள்,’ என்பதை முதல் பக்கச் செய்தியில் போடுவார்களா என்ன? அது போல. ஆனால் அந்தப் பெண்ணின் உடலைக் குடும்பத்தினருக்குக் கொடுக்காமல் போலீசே ‘கடத்திக் கொண்டு’ போய் ராத்திரியோடு ராத்திரியாக எரித்துப் போட்டு விட்டது என்பது உ.பி.யின் அராஜக standards களையும் தாண்டி அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.

அப்படி ஒரு மாபெரும் கொடூரம் தங்களின் இந்துத்துவத் தலைமகன் ஆளும் மாநிலத்தில் நடந்ததிருக்கிறது என்பதை பா.ஜ.க அபிமானிகள் அலட்சியமாகக் கடந்தது வன்முறையின் மீதான அவர்களின் desensitivityஐத் தான் காட்டுகிறது. 12ம் நூற்றாண்டுக் கற்பனை மகா ராணியின் கற்பைக் காக்கக் கொதித்தெழுந்து தியேட்டர்களை நொறுக்கியவர்கள், இருநூறு ஆண்டுக்கு முந்தைய இலக்கியப் புனைவு ஒன்று அவமதிக்கப் பட்டதற்குக் கொதித்தெழுந்து வேல் தூக்கித் தெருவில் இறங்கியவர்கள், ஹாதராஸ் சம்பவத்தில் ‘இதுக்கெல்லாம் டென்ஷன் ஆவாங்களா சார்?’ என்ற ரீதியில் கடந்தார்கள்.

ஒரு கிரிக்கெட் வீரரின் மனைவி கர்ப்பமானது, ஒரு நடிகருக்குப் பிறந்த நாள் வந்த செய்தி எல்லாம் சரியாகத் தெரிய வரும் பிரதமருக்கு இப்படிப்பட்ட ஒரு சம்பவம் தனது செல்ல சிஷ்யன் ஆளும் மாநிலத்தில் நடந்ததே தெரிய வரவில்லை. இப்படிப்பட்ட அட்டூழியங்கள் உ.பி. யில் எந்தக் கட்சி ஆண்டாலும் நடக்க வாய்ப்பு உள்ளதுதான்; ஆனால் அந்த அட்டூழியங்களை யும் கூட பபிள் கம் மெல்லும் ரேஞ்சுக்கு அலட்சியமாகக் கடக்க வேறு கட்சியின் தொண்டர் களும் தலைவர்களும் முயற்சி செய்வார்களா என்றுதான் தெரியவில்லை.

இந்துத்துவம் ஒரு கொடும் விஷ செடி.

ஸ்ரீதர் சுப்பிரமணியன்

Related Posts

error: Content is protected !!