ஹன்சிகா தத்தெடுத்த 25 குழந்தைகளுடன் குலுமனாலி பயணம்!
கொளுத்தும் கோடை வெயில் கால்ம் வந்ததும் நம்மூர் நட்சத்திரங்கள் பெரும்பாலும் கண்ணில் கறுப்பு கண்ணாடி அணிந்துகொண்டு ஃபாரீன் அல்லது குளிர்பிரதேசங்களுக்கு பிர்ண்ட்ஸோடு சென்று பொழுதை கழிப்பது வழக்கம்.ஆனால் -நடிகை ஹன்சிகா சற்று வித்தியாசமாக தனது கோடை பயணத்தை திட்டமிட்டு தான் இதுவரை தத்தெடுத்த 25 குழந்தைகளையும் குலுமனாலிக்கு 5 நாள் இன்ப சுற்றுலாவாக அழைத்து செல்ல முடிவு செய்து இருக்கிறாராம்.
நடிகை ஹன்சிகா சமூக சேவை பணிகளில் ஆர்வம் உள்ளவர். சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு ஒதுக்கி ஓசை இல்லாமல் உதவிகள் செய்து வருகின்றார்.அத்துடன் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதுவரை 25 குழந்தைகளை தத்தெடுத்து இருக்கிறார்.அந்த குழந்தைகளுக்கான உணவு, தங்கும் இடம், படிப்பு செலவு எல்லாவற்றையும் ஹன்சிகாவே கவனித்து கொள்கிறார். இந்நிலைல்தான் தற்போது கோடை விடுமுறையில் தத்தெடுத்த 25 குழந்தைகளையும் குலுமனாலிக்கு 5 நாள் இன்ப சுற்றுலாவாக அழைத்து செல்ல முடிவு செய்து இருக்கிறார்.
தற்போது ‘வாலு பட ஷூட்டிங்கிற்காக பாங்காக் சென்றிருக்கிறார் ஹன்சிகா. அங்கிருந்து திரும்பியதும் 25 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு குலுமணாலி செல்கிறார். இதுபற்றி அவரது அம்மா கூறும்போது, ‘‘குலுமணா லிக்கு 5 நாள் சுற்றுலாவாக தான் வளர்த்து வரும் 25 குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்கிறார் ஹன்சிகா. பிஸியான ஷூட்டிங் பணிகள் இருப்பதால் ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே குழந்தைகளுடன் அவர் பொழுதை செலவிடுகிறார். பிறகு அவர்களை நான் பார்த்துக்கொள்வேன். இதற்கான ஏற்பாடுகளை ஹன்சிகா செய்து வருகிறார். அடுத்த முறை எல்லா குழந்தைகளையும் வெளிநாடு அழைத்து செல்ல எண்ணி இருக்கிறார் என்றார்.
இதற்கிடையில் ஒரு முதியோர் இல்லம் கட்டும் தன் ஆசையையும் ஹன்சிகா வெளியிட்டிருக்கிறார். இது பற்றி அவர் “என்னோட 3வது பிறந்த நாளுக்கு, அம்மா அனாதை இல்லத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள குழந்தைகளுடன் விளையாட வைத்து பிறந்த நாளை கொண்டாடினார். அன்று முதல் இன்று வரை அனாதை குழந்தைகளுடன்தான் எனது பிறந்த நாள். அப்புறம் நான் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பிச்சேன். என்னை பார்த்ததும் ஓடிவந்து கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கிற அவுங்க அன்புக்கு நிகரா உலகத்துல எதுவுமே இல்லை. இப்ப குழந்தைங்களை பார்த்துக்கிற மாதிரி கைவிடப்பட்ட வயதானவர்களையும் பார்த்துக்கணுங்ற ஆசை இருக்கு. ஒரு முதியோர் இல்லம் கட்டும் திட்டத்தில் இருக்கிறேன். அதுக்காக நிறைய படங்கள் நடிக்கணும், நிறைய சம்பாதிக்கணும்” என்கிறார்!