ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ் டெவலப்மென்ட் பேங்கில் துணை மேலாளர் பதவி

ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ் டெவலப்மென்ட் பேங்கில்  துணை மேலாளர் பதவி

சிட்பி என்ற பெயரால் பலராலும் அறியப்படும் ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ் டெவலப்மென்ட் பேங்க் லிமிடெட் நிறுவனம் சிறுதொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பிரத்யேகமாக நிறுவப்பட்டது. இந்த வங்கியில் காலியாக உள்ள 80 கிரேடு ஏ பிரிவிலான அதிகாரி பதவிகளை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
bank jobs

வயது: சிட்பி வங்கியின் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக இளநிலை அல்லது முதுநிலை பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.எஸ்., சி.எப்.ஏ., போன்ற படிப்புகளை முடித்தவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதள முகவரிக்கு சென்று அறியவும். இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 20.07.2014

இணையதள முகவரி: <http://www.sidbi.in/sites/default/files/careers/Detailed_advt_General_Stream.pdf>

error: Content is protected !!