ஸ்டைலிஷான நடிகை விருது வாங்கிய ஸ்ருதி மினி ஆல்பம்!

ஸ்டைலிஷான நடிகை விருது வாங்கிய ஸ்ருதி மினி ஆல்பம்!

அண்மையில் துபாயில் சர்வதேச தென் இந்திய திரைப்பட கலைஞர்களுக்கான சிறந்த விருது வழங்கும் விழா நடந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைத்துறையினர் கலந்துகொண்டனர். நான்கு மொழியிலும் சிறந்த படம், சிறந்த இயக்குனர், நடிகர், நடிகைகள் உட்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. ஸ்ரீதேவி, போனிகபூர், ஷாகித் கபூர், சோகைல் கான், இலியானா சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளை ஆர்யா, ராணா, ஸ்ரேயா, பார்வதி ஓமனக்குட்டன் தொகுத்து வழங்கினர். விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது சவுகார் ஜானகிக்கு வழங்கப்பட்டது. த்ரிஷா, காவ்யா மாதவனுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் அதில், ஸ்டைலிஷான நடிகைக்கான விருது ஸ்ருதி ஹாசனுக்கு வழங்கப்பட்டது. தென் மாநிலங்களின் பெருமைமிகு நடிகை என்ற விருது அசினுக்கும், இளம் தலைமுறையினரை கவர்ந்த நடிகை என்ற விருது காஜல் அகர்வாலுக்கும் வழங்கப்பட்டது.


சிறந்த அறிமுக நடிகர் விருது, விக்ரம் பிரபுவுக்கும், சிறந்த அறிமுக நடிகை விருது, லட்சுமி மேனனுக்கும் வழங்கப்பட்டது. தனக்கு கிடைத்த விருது குறித்து ஸ்ருதி கூறுகையில், ‘ஸ்டைலிஷ் நடிகைக்கான விருது எனக்கு கிடைத்தது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதுவும் தலைசிறந்த நடிகையான ஸ்ரீதேவி கையால் விருது வாங்கியது மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியளிக்கிறது “என பெருமிதம் பொங்க தெரிவித்துள்ளார்.

கோடங்கி

Related Posts

error: Content is protected !!