விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணி வாய்ப்பு!

விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணி வாய்ப்பு!

மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான இந்திய விமான நிலையங்கள் ஆணையம் விமான நிலையங்களின் நிர்வாகம், விமான போக்குவரத்து மேற்பார்வை, தகவல் தொடர்பு, கண்காணிப்பு ஆகிய பணிகளை செய்து வருகிறது.விமான நிலையங்களில் பாதுகாப்பை கண்காணிப்பதற்காக துணை பொது மேலாளர், மேலாளர், இளநிலை நிர்வாக அதிகாரி ஆகிய 46 காலியிடங்களுக்கு தகுதியானவர்களை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தேர்வு செய்ய உள்ளது.
airport logo
பணியின் விவரம்:

1. துணை பொது மேலாளர்: 1 இடம்.

தகுதி: ஏதேனும் ஒரு பட்டத்துடன் ராணுவம் அல்லது துணை ராணுவ படைகளில் குறைந்தபட்சம் ஓராண்டு லெப்டினென்ட் கர்னல்/ கமான்டன்ட்டாக பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான தகுதி.

சம்பளம்: ரூ.36,600 – 62,000. பாதுகாப்பு பணியில் 10 முதல் 15 ஆண்டுகள் முன்அனுபவம் இருக்க வேண்டும்.

2. மேலாளர்: 25 இடங்கள்.

தகுதி: ஏதேனும் ஒரு பட்டத்துடன் ராணுவம் அல்லது துணை ராணுவப் படைகளில் குறைந்தபட்சம் ஓராண்டு கேப்டன்/ அசிஸ்டென்ட் கமாண்டன்ட்டாக பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான தகுதி.

சம்பளம்: ரூ.24,900 – 50,500. பாதுகாப்பு பணியில் 3 முதல் 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

3. ஜூனியர் எக்சிக்யூடிவ்: 20 இடங்கள்.

தகுதி: ஏதேனும் ஒரு பட்டத்துடன் ராணுவம் அல்லது துணை ராணுவ படைகளில் ஓராண்டு சுபேதார் அல்லது இன்ஸ்பெக்டராக பணிபுரிந்திருக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://www.aai.aero/public_notices/aaisite_test/main_new.jsp என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager (HR),
Airports Authority of India,
Rajiv Gandhi Bhawan,
NEWDELHI 110 003.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.6.2014.
Airport Authority of India to join Officer 46 Vacancies Announcement

error: Content is protected !!