வாரணாசியில் காசி விஸ்வநாதா் கோயில் : பிரதமர் மோடி அர்பணிப்பு!

வாரணாசியில் காசி விஸ்வநாதா் கோயில் : பிரதமர் மோடி அர்பணிப்பு!

த்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தில் ரூ.339 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது  மோடி, அங்குள்ள கங்கைநதியில் புனித நீராடினார்.

முன்னதாக, இன்று காலை வாராணசியில் அமைந்துள்ள காலபைரவர் ஆலயத்துக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி. இதையடுத்து, ரூ.339 கோடியில் செலவில் மேற்கொள்ளப்பட்ட காசி விஸ்வநாதா் கோயில் வளாக மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் தொகுதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். காசி விஸ்வநாதரின் பக்தா்கள் நெருக்கடி மிகுந்த தெருக்கள் வழியாக, மோசமான சுற்றுப்புறங்களைக் கடந்து கோயிலுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இந்த நிலையை மாற்றும் வகையில் பிரதமா் மோடி, ஆலய வளாக மேம்பாட்டுத் திட்டத்தை முன் வைத்தார்.

அதன்படி, ஆலயத்தையும், கங்கை நதியின் கரைகளையும் இணைக்கும் பாதையை பக்தா்கள் எளிதில் அணுகும் வகையில் இத்திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற 2019 மார்ச் 8-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கின. இதற்காக சாய்தளங்கள், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

திட்டத்தின் முதல்கட்டத்தில் மொத்தம் 23 கட்டடங்கள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஆலயத்துக்கு வரும் பக்தா்களுக்கு யாத்ரி சுவிதா மையங்கள், சுற்றுலா வசதி மையம், வேத மையம், அருங்காட்சியகம், பார்வையாளா் மாடம், உணவு விடுதிகள் உள்பட வகையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பழைய கட்டடங்களை இடிக்கும்போது, 40-க்கும் மேற்பட்ட பழைமையான கோயில்கள் கண்டறியப்பட்டன. அவற்றின் முந்தைய அமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல், அவை பாதுகாக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன.

https://twitter.com/aanthaireporter/status/1470324819614846976

முன்பு 3000 சதுர அடிக்குள் சுருங்கியிருந்த வளாகத்தின் அளவு 5 லட்சம் சதுர அடி என்னும் பிரம்மாண்டமான பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு இடையிலும், திட்டமிட்டபடி குறிப்பிட்ட காலத்துக்குள் இத்திட்டம் முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Related Posts

error: Content is protected !!