June 1, 2023

”லிங்கா” ஷுட்டிங்கிற்கு கன்னடர்கள் எதிர்ப்பால் ஹைதராபாத்துக்கு ஷிப்டிங்!

‘கோச்சடையான்’படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் உள்ளது.தற்போது கோச்சடையானுக்காக கடன் கொடுத்த வங்கியில் இருந்தும் நோட்டீஸ் வந்து திட்டமிட்டபடி 23ம் தேதி ரிலீஸ் ஆகுமா? என்பது சந்தேகமாக உள்ளது,இதற்கிடையில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படமாக ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது.மைசூர் ரஜினிக்கு ராசியான இடம் என்பதாலும், ஏற்கனவே அங்கு படமாக்கப்பட்ட பல படங்கள் வெற்றிகரமாக ஓடி இருப்பதாலும், மைசூரை சுற்றியுள்ள பகுதிகளிலும் மைசூர் அரண்மனையிலும் பெரும் பகுதி காட்சிகளை படமாக பக்காவாக பிளான் பண்ணி இருந்தனர்.ஆனால் மைசூர் அரண்மனையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லை என்பதுடன் மைசூரிலும் படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ஹைதராபாத்துக்கு மாற்ற முடிவாகியிருக்கிறதாம்.
Rajinikanth-linga 1
இந்த லிங்கா ஷூட்டிங்கிற்க்கான பூஜை போட்ட நாள் முதலே காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி செயல்பட்டதாக கண்டித்து கன்னடர்கள் இந்த படப்பிடிப்பு நடந்த இடத்தில் போராட்டம் நடத்தினர். பல்வேறு இடங்களில் ரஜினி உருவ பொம்மையை எரிக்கவும் முற்பட்டனர். இதையடுத்து படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்போடு ரஜினி, சோனாக்சி சின்ஹா நடித்த பாடல் காட்சி மற்றும் வசன காட்சிகளை படமாக்கி முடித்தனர்.இதற்கிடையில் படத்தின் தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ், இது குறித்து ,“இதெல்லாம் விளம்பரத்திற்காகவும் வேறு சில விஷயங்களுக்காகவும் செய்கிறார்கள். உண்மையிலே ரஜினி எந்த அளவுக்கு கர்நாடகாவை நேசிக்கிறார் என்பது கன்னட மக்களுக்கு தெரியும். அதேபோல கன்னட மக்களும் ரஜினியை அளவு கடந்து நேசிக்கிறார்கள்.எக்காரணம் கொண்டும் ‘லிங்கா’பட‌ ஷூட்டிங்கை கர்நாடகாவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற மாட்டோம். மேலும் கர்நாடகா முழுவதும் ரஜினியின் நெருங்கிய நண்பர்களும் கர்நாடக வீட்டுவசதித் துறை அமைச்சருமான‌ அம்பரீஷ் போன்ற நிறைய அரசியல்வாதிகளும் அவருடைய நலம் விரும்பிகளாக இருக்கிறார்கள். எதனைப் பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை”என்றெல்லாம் சொல்லியிருந்தாராம்  

ஆனாலும் தொடர்ந்து கன்னடர்கள் எதிர்ப்பினால் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பபை நடத்த இயலாத சூழ்நிலை நிலவி வருவதால், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்துக்கு மாற்ற படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.