ரெயில் கட்டணம் உயர்வை தொடர்ந்து சமையல் கியாஸ் விலை மாதம் ரூ.10 உயரும்?

ரெயில் கட்டணம் உயர்வை தொடர்ந்து சமையல் கியாஸ் விலை மாதம் ரூ.10 உயரும்?

ரெயில் கட்டண உயர்வை தொடர்ந்து, சமையல் கியாஸ் சிலிண்டர் விலையையும் மாதந்தோறும் 10 ரூபாய் உயர்த்துவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மாதம்தோறும் 10 ரூபாய் உயர்த்துவதன் மூலம், சமையல் கியாசுக்கான மானிய செலவு ரூ.7 ஆயிரம் கோடி மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.
Gas cylinder price
இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்த சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கூறி இருந்தார். ரெயில் கட்டணம் உயர்வு அந்த கடுமையான நடவடிக்கைகளில் ஒன்றாக, ரெயிலில் பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதமும் மத்திய அரசு நேற்று முன்தினம் திடீரென்று உயர்த்தியது. மேலும் மின்சார ரெயில்களில் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு 25-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. சரக்கு கட்டண உயர்வால் பிற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதனால் இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெட்ரோலிய அமைச்சகத்தின் தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனை பிரிவு, சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெட்ரோலிய அமைச்சகத்தின் தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனை பிரிவு, சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை உயர்த்துவது பற்றி பெட்ரோலிய துறை ராஜாங்க மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு சமீபத்தில் சிபாரிசு செய்ததாகவும், அதன்படி விலை உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

error: Content is protected !!