ருத்ர தாண்டவம் – விமர்சனம்!

இந்த தமிழ் சினிமா எத்தனையோ வகையான இயக்குநர்களை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது. சமூகப் பொறுப்புணர்வோடு கதை சொன்ன இயக்குநர்கள், குடும்ப பாங்கான கதை சொன்ன இயக்குநர்கள், நகைச்சுவை மட்டுமே சொல்லி படமெடுத்த இயக்குநர்கள், மசாலா கதை சொல்லும் இயக்குநர்கள் என்று நீளும் பட்டியலில் சாதி & மதத்தை மட்டுமே அலசி சர்ச்சையாக்கி படமெடுக்கும் இயக்குநரும் பயணிக்கிறார் என்பதுதான் சோகம். அதிலும் எடுத்துக் கொண்ட கதை(?)யை நாடக பாணியில் வழ வழவென்று பேசியே சினிமாவாக்கி இருப்பது மேலும் சோர்வைக் கொடுக்கிறது.

சென்னையில் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் நாயகன் ருத்ர பிரபாகரன் என்ற நேம் கொண்ட ரிச்சர்ட்ஸ்ரீ தன் ஏரியாவில் கஞ்சா விற்கும் இளைஞர்களை துரத்திச் செல்லும்போது ஒரு இளைஞன் கீழே விழுந்து , கோமா ஸ்டேஜ் போய் இறந்துவிட, அந்த இளைஞன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், இன்ஸ்பெக்டர் அவனை அடித்துக் கொன்றுவிட்டதாக பிரச்சனை எழுகிறது. இதனால் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் ஆகி அரெஸ்ட் செய்யப்படுகிறார். இதையடுத்து மனைவி (தர்ஷா குப்தா) அவரைப் பிரிகிறார். இப்படி போகும் பிரச்சனையை ஹீரோ எப்படி எதிர் கொள்கிறார் என்பதே கதை

error: Content is protected !!