ராம. நாராயணன் – நினைவஞ்சலி

RIP – நண்பர் – ராம நாராயணன் – உலகத்தில் அதிகம் படம் இயக்கிய ரெக்கார்ட் ஹோல்டர், இன்று நம்மோடு இல்லாமல் இறைவனடி சேர்ந்தார். இவரை பற்றி கூற பல இருந்தாலும் சில முக்கிய நிகழ்வுகளை கண்டிபபாய் சொல்லவில்லை என்றால் நன்றி கெட்டவனாய் ஆகிவிடுவேன்.
ராம நாராயணன் காரைக்குடியில் பிறந்தவர். சென்னைக்கு எல்லோரும் போல சினிமா கனவுடன் வந்த இவர் முதலில் சினிமாவுக்கு பாட்டு எழுத தான் வந்திருந்தார். ஆனால் இவரும் எம் ஏ காஜா என்பவரும் சேர்ந்து “ராம் – ரஹீம்” என்ற பெயரில் கூட்டாக சினிமாவுக்கு வசனம் எழுதி வந்து 1976 ஆம் ஆண்டு “ஆசை அறுபது நாள்” என்ற திரைபடத்துக்கு கதை வசனம் எழுத ஆரம்பித்து 1977 முதலே “மீனாக்ஷி குங்குமம்” என்ற திரைப்படத்தை இயக்க துவங்கி 9 மொழிகளில் உலகத்திலே அதிக படங்கள் இயக்கிய ஒரே மனிதர் என்ற பெருமை தமிழர்களுக்கு இன்னொரு பெரிய மரியாதை.
கொஞ்சமும் அதிர்ந்து பேசாத அற்புத குணம், நான் சினிமாவின் வர்த்தகத்தில் இருந்த 2005-2009 ஆண்டு காலத்தில் தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக இருந்து இவர் செய்த சாதனைகள் பல. கலைஞருக்கு மிக நெருக்கமாக இருந்த இவர் கலைஞர் டீவியின் ஒரு அஸ்திவார தூண் என்றால் அதிகம் இல்லை. எனக்கு இவர் செய்த பெரும் உதவி – எனக்கு திருமணம் இன்னும் பத்து நாட்கள் என்று இருந்த நிலையில் கொடுத்த காசை கேட்ட ஒரே காரணத்துக்காக வீடியோ பைரசி என்று குற்றம் சுமத்தி இதில் என்னை வீழ்த்தலாம் என்று நினைத்த ஒரு தரம் கெட்ட மானிடர் தன் சக தொழிலாளி தயாரிப்பாளர் என்று கொஞ்சம் கூட பார்க்காமல் அமைதியாய் விசாரித்த போது அவர் கேட்ட ஒரு கேள்வி – ஏன்பா படம் அவர் வாங்கிருக்காரு – அவர்கிட்ட ரைட்ஸ் இருக்கு அது போக படத்தை 85 பேரோடு பார்த்து கொண்டு இருக்கும் போது எப்படியா பைரசி பண்ணுவார்னு கேட்ட கேள்விக்கு பதிலே தராமல் முழித்த அந்த தயாரிப்பாளர்க்கு வார்னிங் கொடுத்து இந்த மாதிரி செய்ய கூடாது என எழுதி வாங்கினார் – அப்போது நான் தயாரிப்பாளர் சங்கத்தில் அடிப்படை உறுப்பினராய் கூட இல்லை என்பது தான் உண்மை – ஆனாலும் தயாரிப்பாளர் சங்க மெம்பரை கூட கொஞ்சமும் நேர்மை தவறாமல் தண்டித்த ஒரு நேர்மையாளர்.
அது மட்டுமல்ல நீங்கள் குற்றம் செய்யவில்லை – நாளை காலை நடிகர் விஜய் மட்டும் பல ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் – ஒன்பது ரூபா நோட்டு படத்தின் இசை தட்டு விழாவில் நீங்கள் தான் தலைமை தாங்க வேண்டும் என வற்புறுத்தி அழைத்து சென்றது மட்டுமில்லாமல் – அத்தனை பெரிய கூட்டத்தில் இதை பெருந்தன்மையாக வெளிபடுத்திய அற்புத மனிதர். இவர் ஆத்மா இறைவன்டி சேர என் குடும்பத்தோடு கடமைப்பட்டுள்ளோம்.