ரஷ்ய போர் விமானங்கள் தாக்குதல் – சிரியாவில் 44 பேர் பலி

இட்லிப்: சிரியாவில் நுஸ்ரா முன்னணி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய இட்லிப் மாகாண ஜர்தானா கிராமத்தின்மீது ரஷ்ய போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில் 44 பேர் உயிரிழந்தார்கள். மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இடிபாடுகளுக்கு இடையே உடல்களைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என ரஷியா மறுப்பு தெரிவித்துள்ளது. சில நாட்களாக பல்லாயிரக்கணக்கான போராளிகள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து போர் அச்சத்தால் வெளியேறி வருகிறார்கள். இந்த பகுதியில் மிகவும் பதற்றமான சூழலே நிலவிவருகிறது.