ரயில் பயணிகளுக்கு ‘ஷாக்: டிசம்பர் 26 முதல் அமலாகும் புதிய கட்டண உயர்வு!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுப்போக்குவரத்து அமைப்பான இந்தியன் ரயில்வே, நீண்ட நாட்களுக்குப் பிறகு பயணிகள் கட்டணத்தில் மாற்றங்களைச் செய்துள்ளது. வரும் டிசம்பர் 26 முதல் நாடு முழுவதும் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இருப்பினும், சாமானிய மக்களைப் பாதி்க்காத வகையில், மிகக் கவனமாக இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பது இந்த அறிவிப்பின் சிறப்பம்சமாகும்.
யாருக்கெல்லாம் ‘நோ’ டென்ஷன்? : தினசரி வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் நடுத்தரக் குடும்பத்தினரின் நிலையைக் கருத்தில் கொண்டு, பெரும்பாலனவர்களுக்கு இந்தக் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

-
215 கி.மீ.க்குக் கீழ்: நீங்கள் பயணிக்கும் தூரம் 215 கிலோ மீட்டருக்கும் குறைவாக இருந்தால், உங்களுக்கு எந்தவிதமான கட்டண உயர்வும் இல்லை. பழைய கட்டணத்திலேயே பயணிக்கலாம்.
-
சீசன் டிக்கெட் (Season Ticket): தினசரி வேலைக்குச் செல்வோர் பயன்படுத்தும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்குக் கட்டண உயர்வு கிடையாது.
-
புறநகர் ரயில்கள் (Suburban): சென்னை போன்ற பெருநகரங்களில் இயங்கும் புறநகர் மின்சார ரயில்களிலும் கட்டண உயர்வு இல்லை.
யாருக்குக் கட்டணம் உயர்கிறது? நீண்ட தூரப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே மிகச் சிறிய அளவில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
-
சாதாரண வகுப்பு (Ordinary Class – Non-Suburban):
-
215 கி.மீ.க்கும் அதிகமான தூரம் பயணித்தால் மட்டுமே கட்டணம் உயரும்.
-
உயர்வு: கிலோ மீட்டருக்கு 1 பைசா மட்டும்.
-
-
மெயில் மற்றும் விரைவு ரயில்கள் (Mail/Express):
-
இதிலும் 215 கி.மீ.க்கு மேல் பயணித்தால் மட்டுமே மாற்றம்.
-
உயர்வு: கிலோ மீட்டருக்கு 2 பைசா.
-
-
ஏசி வகுப்புகள் (AC Classes):
-
அனைத்து விதமான ரயில்களிலும் (தூரம் கணக்கில்லை), ஏசி பெட்டிகளில் பயணிப்போருக்குக் கட்டணம் உயரும்.
-
உயர்வு: கிலோ மீட்டருக்கு 2 பைசா.
-
ரூ.10 மட்டுமே உயர்வு – எப்படி? இந்தக் கட்டண உயர்வைக் கேட்டுப் பயணிகள் அச்சப்படத் தேவையில்லை என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. உதாரணமாக, ஒரு பயணி 6,500 கிலோ மீட்டர் தூரம் பயணிப்பதாக வைத்துக்கொண்டால் கூட (இந்தியாவில் அவ்வளவு நீண்ட தூர ரயில் இல்லை என்றாலும்), அவருக்கு அதிகபட்சமாக ரூ.10 மட்டுமே கட்டணம் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த உயர்வு மிக மிகக் குறைவானதே.
ரயில்வேயின் கணக்கு என்ன? இந்தச் சிறிய அளவிலான கட்டண உயர்வு மூலம், நடப்பாண்டில் ரயில்வே துறைக்குக் கூடுதலாக ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளுக்குப் பெரிய சுமையை ஏற்றாமல், ரயில்வேயின் உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்ட இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால்… லோக்கல் ரயிலில் போறவங்களுக்குக் கவலை இல்லை; வெளியூருக்குப் போறவங்களுக்கு அடிசினலா சில்லறைச் செலவு!


