மூளையில் உள்ள தேவையற்ற நினைவுகளை நீக்கும் மாத்திரை

மூளையில் உள்ள தேவையற்ற நினைவுகளை நீக்கும் மாத்திரை

நெதர்லாந்தில் உள்ள நிஜ்மெகன் ராட்பட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, மார்ஜின் குரோஸ் மற்றும் அவரது சகாக்கள் இணைந்து, மின் அதிர்வு சிகிச்சையின் மூலம், தேவையற்ற நினைவுகளை நீக்க முடியும் என்று கண்டுபிடித்த நிலையில் மனதில் பதிந்து கிடக்கும் மோசமான நினைவுகளை மட்டும் ஒட்டு மொத்தமாக அழித்துவிடும் புதிய மருந்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது லண்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்களால் நடந்திருக்கிறது..நினைவுகள் நிரந்தரமானதல்ல என்பதன் அடிப்படையிலும், நினைவுகளை நிரந்தரமாக வைக்க மூளை சேமிப்பு பெட்டியல்ல என்பதன் அடிப்படையிலும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
Drug for Negative-Memory-
இதன் ஒரு பகுதியாக எலக்ரோகன்வல்சிவ் (இசிடி) என்னும் மின் அதிர்ச்சி சிகிச்சையில், நோயாளியின் தலையில் மின் பட்டைகளை பொருத்தி, மின்சாரம் மூளைக்கு செலுத்தப்பட்டது.இதற்காக, 42 பேருக்கு மின் அதிர்வு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது; கார் விபத்து மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர் உட்பட, சிகிச்சை அளிக்கப்பட்ட அனைவருக்கும் திரைப்படம் காட்டப்பட்டு, அவர்களிடம் கேள்வித்தாள் வழங்கப்பட்டது.அடுத்த நாள் அந்த கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களில், அவர்களின் கெட்ட நினைவுகள் அழிந்து இருப்பதும், அவர்களால் அவற்றை நினைவுபடுத்த இயலாததும் கண்டறியப்பட்டது.

இதனிடையே உணவு முறை பிறழ்ச்சி, முந்தைய கால மன அழுத்தம், போபியாக்கள் போன்ற நோய்களைக் கொண்டவர்களுக்கு ஒரு மருந்தினை அளிப்பதன் மூலம் அவர்களது நோயை குணப்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.எலிகளுக்கு இந்த மருந்தினை கொடுத்து பரிசோதித்து, இந்த மருந்தின் தன்மையை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது.

error: Content is protected !!