முதியோர்களுக்கு மரியாதை – சென்னை பாஸ் மார்க்!

முதியோர்களுக்கு மரியாதை – சென்னை பாஸ் மார்க்!

நம் நாட்டில் முதியோர்களை மதிக்காத போக்கு அதிகரித்து வருகிறது. பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது, சொத்துகளை எழுதிவாங்கிவிட்டு விரட்டி அடிப்பது, அடிப்படைத் தேவைகளைக் கூட கவனிக்காமல் புறக்கணிப்பது அதிகரித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது நாடு முழுவதும் 100 மில்லியனுக்கு அதிகமான முதியோர்கள் இருந்தனர். 2025-ம் ஆண்டில் 160 மில்லியன், 2040-ம் ஆண்டில் 324 மில்லியன் முதியோர்கள் இருப்பர் என கணக்கிடப்பட்டுள்ளது. அதே சமயம் முதியோர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது.!

இதனிடையே பரப்பரப்பான நகரங்களில் ஒன்றான நம் சிங்கார சென்னையில் மக்கள் அவரவர்கள் வேலைகளை கவனிப்பது அனைவரும் அறிந்ததே. இன்றைய காலகட்டத்தில் யார் எப்படி போனால் நமக்கென்ன என்று வாழும் மனிதர்களே அதிகம். இருப்பினும் அண்மையில் நடத்தப்பட்ட சர்வேயில், பொது இடங்களில் முதியவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளும் மக்களில் முதன்மை இடத்தில் டெல்லியும் அதற்கு அடுத்து சென்னைவாசிகளும் இருப்பது தெரியவந்துள்ளது. மற்ற மெட்ரோ நகரங்களை காட்டிலும் சென்னை மக்கள் வயதானவர்களை அதிகம் மரியாதையுடன் நடத்துவதாக அந்த ஆய்வு கூறியுள்ளது.

’ஹெல்ப் ஏஜ் இந்தியா’ என்ற பிரபல தன்னார்வ தொண்டு மையம் முதியவர்கள் வாழ்வு, அவர்கள் வீட்டிற்குள் நடத்தப்படும் விதம், வயதானவர்களுக்கான பிரச்சனைகள் என்று பல விதங்களில் அவர்களுக்கு உதவிகள் புரிய செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொது இடங்களில் முதியோர்களை மக்கள் எவ்வாறு நடத்துகின்றனர்? அவர்களிடம் அன்பாக பழகுகிறார்களா? என்பன பல விஷயங்கள் அடங்கிய ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் மற்ற நகரங்களை விட சென்னை மற்றும் புது டெல்லியில் உள்ள மக்கள் பொது இடங்களில் வயதானவர்களை அன்புடன் நடத்துவதாக முடிவுகள் தெரிவிக்கிறது. கூடவே பெங்களுருவில் வாழும் முதியோர்களில் 70% பேர் அந்த ஊர் மக்களால் தவறான முறையிலும், பொது இடங்களில் நேரடியாகவும் மோசமாகவும் நடத்தப்பட்டதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர். ஆனாலும் சென்னையில் வசிக்கும் 49% பேரும் டெல்லியில் 23% மட்டுமே தாங்கள் அந்த ஊர் மக்களால் அன்புடன் நடத்தப்படாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆம். சிங்காரச் சென்னைக்குப் பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், அண்மையில் வெளியான இந்த ஆய்வு முடிவு தனி பெருமை ஒன்றை அளிக்கிறது. சமீப காலமாக முதியவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து எடுக்கப்பட்ட அந்த சர்வே முடிவில், தென் இந்தியாவில் குறிப்பாக `சென்னை’ ஒப்பீட்டு அளவில் இந்திய மூத்த குடிகளுக்குப் பாதுகாப்பான நகரம் என்று தெரிகிறது .“இந்த சர்வே சென்னை மற்றும்சிவக்குமார் காஞ்சிபுரத்தில் உள்ள 65 வயது முதல் 75 வயது உள்ளவர்களிடம் மட்டுமே எடுக்கப்பட்டது” என சர்வே எடுத்த ஹெல்பேஜ் இந்தியாவின் மாநிலத் தலைவர் சிவக்குமார் தெரிவித்தார். “ஒப்பீட்டு அளவில் குறைவாக இருந்தாலும், தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்குப் பிரச்னை இல்லாமல் இல்லை” என்றும் தெரிவித்தார் சிவக்குமார். அவர், முதியோர் தொடர்பான வேறு சில விவரங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்…

“தமிழகத்தைப் பொறுத்தவரை முதியவர்களை ‘வேண்டுமென்றே’ தொலைத்துவிடுவதில், வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களே முதன்மையாக இருக்கிறார்கள். 2000-ம் ஆண்டுக்குப் பிறகு கணவன் மட்டுமல்லாமல் மனைவியும் வேலைக்குச் செல்லும் வழக்கம் அதிக அளவில் அதிகரித்துள்ளது. இதனால் தனிமையை உணரும் முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பொருளாதாரத் தன்னிறைவு அடைந்த பெண்கள், முன்புபோல் குடும்ப விவகாரங்களில் மூத்தவர்களிடம் எந்தக் கருத்தும் கேட்பதில்லை. இதனால் தம்மைத் தள்ளி வைத்துவிட்டதாக அவர்கள் உணர்கிறார்கள். முக்கிய முடிவுகளில் கலந்தாலோசிப்பதில்லை என்பதில் தொடங்கி அவற்றை தம்மிடம் சொல்வதுகூட இல்லை என்பது வரை பல்வேறு கவலைகளுடன் இருக்கிறார்கள். இது, கடந்த பத்து ஆண்டுகளாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் காணக்கூடிய ஒன்றாக இருப்பது; கோயில்கள், கடற்கரை மற்றும் பூங்காக்களில் முதியவர்கள் சேர்ந்து பேசிக்கொண்டிருப்பது. இது, குடும்பத்தினர் அவர்களுடன் நேரம் செலவழிப்பதில்லை என்பதையே காட்டுகிறது.

மேலும் மிழகம் முழுவதும் இலவச முதியோர் இல்லங்களைவிட, அதிக வசதியுடன்கூடிய கட்டண முதியோர் இல்லங்கள் அதிகரித்துள்ளன. இது நகர் பகுதியில் நான்கு மடங்கு கூடியுள்ளது. கிராமப்புறப் பகுதிகளில் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடுவது என்பது இன்றளவும் மிக மிக அவமானகரமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

CLOSE
CLOSE
error: Content is protected !!