முடக்குவாத நோயாளி தொடங்கி வைக்கும் பிரேசில் கால்பந்து போட்டி!

முடக்குவாத நோயாளி தொடங்கி வைக்கும் பிரேசில் கால்பந்து போட்டி!

32 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் 12ம் திகதி (நாளை) பிரேசில் நாட்டில் தொடங்குகிறது. இந்த போட்டியை நடத்த அந்நாட்டு அரசு ரூ.84 ஆயிரம் கோடி செலவழித்து உள்ளது.வேறு எந்த உலக போட்டியிலும் இவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டது இல்லை. இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3450 கோடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.முதல் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தியுள்ள பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் வரலாற்று சிறப்பு மிக்க இந்த கால்பந்து போட்டியை தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
paralysed-person-to-walk
32 நாடுகளின் தேசிய அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் இன்று தொடங்குகிறது. அதற்கான தொடக்க விழா சாவ் பாவ்லோ நகரில் நள்ளிரவில் நடைபெறுகிறது.வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன், பிரமாண்ட தொடக்க விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சுமார் 600 கலைஞர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.பிரேசிலின் பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன. அமெரிக்க பாப் பாடகி ஜெனிபர் லோபஸ், உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பாடலைப் பாட உள்ளார்.இதனிடையே ‘மீண்டும் நடக்க தொடங்குங்கள்’ (வாக் அகைய்ன்) என்ற திட்டத்துக்காக உலகின் தலைசிறந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் ‘எக்ஸோ ஸ்கெலிட்டன்’ என்ற செயற்கை கால்களை உருவாக்கியுள்ளனர்.மூளையின் கட்டளைக்கேற்ப செயல்படும் வகையில் மிக நுட்பமான மெல்லிய செயற்கை தோலையும் இணைத்து இந்த மாற்றுக் கால்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவ்வகை செயற்கை கால்களை பொருத்திய ரோபோக்களின் மூலம் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் தோன்றும் உணர்வுகளின்படி இந்த அதிநவீன செயற்கை கால்கள் செயல்படுகின்றன.இவ்வகையிலான செயற்கை கால்களை பொருத்திய பிரேசில் நாட்டை சேர்ந்த சிலருக்கு வழங்கப்பட்ட நீண்ட கால பயிற்சியின் பலனாக, மூளையின் கட்டளைக்கேற்ப செயற்கை கால்கள் துல்லியமாக செயலாற்றுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாளை தொடங்கவிருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியை இவர்களில் ஒருவர் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.இதைப்போன்ற வரலாற்று சிறப்புமிக்க ஒரு போட்டியை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் முதல் பந்தை உதைத்து தொடங்கி வைப்பதன் மூலம், அறிவியலின் ஆற்றலை விளங்க வைப்பதுடன் மட்டுமின்றி, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு தன்னம்பிக்கையை விதைக்கவும் முடியும் என்று பிரேசில் அரசு நம்புகிறது.இதனிடையே உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக பிரேசில் அரசு ரூ.84 ஆயிரம் கோடி செலவழித்து உள்ளது. புதிய ஸ்டேடியம் கட்டுதல் உள்பட அனைத்து வகை செலவாகும். வேறு எந்த உலக போட்டியிலும் இவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டது இல்லை என்பதும் இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3450 கோடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!