முஜே தமில் நஹி மாலும் ஹே – மோடி ரேடியோ பேச்சு!

முஜே தமில் நஹி மாலும் ஹே – மோடி ரேடியோ பேச்சு!

பிரதமர் மோடி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியான வானொலி மூலம் இன்று பேசும் போது, ‘ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு நதி, மரபுடன் தொடர்புடையது. வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் தண்ணீரின் தேவை அவசியம். அதனால் தண்ணீரை நாம் பாதுகாக்க வேண்டும். நீரின்றி எதுவும் இல்லை. தண்ணீரை சேமிக்க 100 நாள் பிரசாரத்தைத் தொடங்க வேண்டும். இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே முடிவு செய்ய வேண்டும். மனசாட்சி, நம்பிக்கை வலுவாக இருந்தால், நீங்கள் இந்த உலகில் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மே-ஜூன் மாதங்களில் மழைக்காலம் தொடங்குகிறது.  மழைநீரை அறுவடை செய்வதற்கும், நீரை தூய்மையாக பயன்படுத்தவும் 100 நாள் பிரசாரத்தைத் தொடங்க வேண்டும். மத்திய நீர்வள அமைச்சகம் மூலம் ஜல்சக்தி அபியான் திட்டத்தின்படி மழைநீரை சேமிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரம் தொடங்கப்படும். இன்று தேசிய அறிவியல் தினம். சிறந்த விஞ்ஞானி டாக்டர் சி.வி.ராமனின் ‘ராமன் விளைவு’ நமது தேடலுக்கான வழிகாட்டியாக உள்ளது. உலகின் மற்ற விஞ்ஞானிகளைப் பற்றி நாம் அறிந்ததைப் போன்று, நம்நாட்டின் விஞ்ஞானிகளைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உலகின் மிகப் பழமையான மொழியைக் கற்க முயன்றேன். ஆனால், எனது முயற்சி வெற்றி பெறவில்லை. தமிழ் மொழி மிகவும் தொன்மையானது. தமிழ் இலக்கியங்கள் உன்னத மானவை. இது ஒரு அழகான மொழி. உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. தமிழ் இலக்கியத்தின் தரம் மற்றும் எழுதப்பட்ட கவிதைகளின் ஆழம் குறித்து என்னிடம் பலர் சொல்லியிருக்கிறார்கள். இதுபோன்ற பல மொழிகளின் இந்தியாவில் உள்ளன. அவை நமது கலாசாரத்தையும், பெருமையையும் பறைசாட்டுகின்றன’ என்றார்.

Related Posts

error: Content is protected !!