மிக மிக அழகான பெண் யார்? By கிருத்திகா தரன்

மிக மிக அழகான பெண் யார்? By கிருத்திகா தரன்

பெண் என்பது இரண்டெழுத்து..அதை உச்சரிக்கும் அளவுக்கு உணர்தல் அத்தனை எளிமை யில்லை…பெண் எங்கு எப்படி அழகு என உணரப்படுகிறாள்? அவள் அழகு எதில் ஒளிந்து இருக்கிறது? உலகில் அனைவருக்கும் மிக அழகு தாய்.. பாட்டியின் சுருங்கிப் போன விரல்கள் பேரப் பிள்ளைகளுக்கு பேரழகு..தங்கை, அக்காக்களின் அன்பில், வருடல்களில் இல்லாத அழகா என்ன..காதலித்தால் பெண் மட்டுமல்ல உலகில் எல்லாமே அழகுதான்.
lady beauty nov 1a
ஆனால் இன்று பெண்கள் என்ன உடை உடுத்தினால் அழகு, இந்த மேக் அப் போட்டா அழகு..இந்த ஹேர் ஸ்டைல் அழகு..வாக்சிங்,பேடி க்யூர் பியுட்டி பார்லர் விஷயங்கள், மேக் அப் சாதனங்கள்..இன்னும் எத்தனையோ வியா பார,விற்பனை பொருட்கள்..எல்லாம் அழகு, அழகு..அழகு வர்த்தகம்.பில்லியன் டாலர்களில் புழங்கும் இடம்.. மிக நுண்ணியமாக புகும் ஆபத்து..இதான் அழகு என்று வரவேற்பறையில் புகுத்தும் வஞ்சம்..பணம் பிடுங்கும் வழிகள்..எல்லா இடங்களிலும் துணிக் கடைகள், வளையல் கடைகள் முதல் முக்குக்கு முக்கு பியுட்டி பார்லர்கள் வரை சம்பாதித்து போகட்டும்..இவற்றை அடைய முடியாதவர்கள் என்னாகிறார்கள்..உடனே ஒரு தாழ்வு மனபான்மை..உனக்கு பருவால் தாழ்வு மனப்பான்மையா..வா..தன்னம்ப்பிக்கையா நடை போட எங்கள் பொருளை வாங்கு என்றும் வலை விரிப்பு..

தமிழக..ஏன் இந்திய பெண்களில் 95% யாரும் விளம்பர பெண் போல இருக்க முடியாது..உடுத்த முடியாது..அவை வெறும் விளம்பர கவர்ச்சி மட்டுமே. இருப்பினும் இப்படி இருந்தால் அழகு என்று பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் போட்டப்படுகிறது, மாய எண்ணம் திணிக்கப் படுகிறது….சிறு வயதில் இருந்தே..உடனே அவன் மனதளவில் பெண் அழகு என்பதற்கு எடுத்துக் காட்டாக நயன், திரிஷா, சமந்தா இல்லாவிடில் காஜல், அனுஷ்கா என்று கற்பனை வடிவமைப்பில் மூழ்குகிறான். அப்படிப்பட்ட காதலியை எதிர்பார்க்கிறான்..சூப்பர் பிகர் என்று சிலரை நினைத்து பின்னாடியே செல்கிறான்.சிலருக்கு மட்டும் டிமான்ட்..

பெண்களிலும் பலர் சாதாரணமாக இருந்தால் மதிப்பு இல்லை என்று தலை முடி வரை கால் விரல் நுனி வரை மாற்றிக் கொண்டு ஆணை கவர முற்படுகிறார்கள். வாழ்கை என்னதான் இருந்தாலும் எதிர்பாலின ஈர்ப்பும் இங்கு முக்கியம். அது இயற்கை. அதுவும் பெண்கள் பாதுக்காப்பு சம்பந்தப்பட்டு உளவியல் ரீதியாக ஆழமாக இருப்பதால் ஆண்களின் அன்பு அவளுக்கு தீவிர தேவையாக இருக்கிறது. தன்னை இன்னும் அழகுப்படுதிக்க முற்ப் படுகிறாள்..இது ஒரு தீரா தலைவலியாக முடிவில்லாமல் போய்க் கொண்டு இருக்கும். நுகர்வோர் விற்பனை பல பில்லியன் டாலர்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கும்.

என்னதான் தீர்வு..சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு ..இதை செய்தால் அழகு இல்லை… அதைவிட தன்னம்பிக்கை, உள்ள செயலை சுயமாக செய்வதுதான் சிறப்பு என்று கற்றுக் கொடுக்கும் தேவை மிக முக்கியம். சுயமாக இருக்கும் பெண்கள் முக்கியமாக எமோஷனல் இன்டலிஜென்ஸ் உள்ள பெண்களை எளிதில் வீழ்த்த முடியாது.

நாம் ஐ.கியு வை இம்ப்ரூவ் செய்வதுப் போல பெண் குழந்தைகளுக்கு EQ அதாவது உணர்வு அறிவை  மேம்படுத்த பயிற்சி கொடுப்பதில்லை. ஒரு ஜாதி கட்சி சேர்ந்த நண்பர் சொன்னார்.. பதினெட்டு வயதில் உள்ள பெண்களுக்கு உடனே திருமணம் செய்து விடுகிறோம். .இல்லாவிடில் வேறு ஜாதி பையன்கள் மயக்கி விடுகிறார்கள் என்றார்.. நான் உங்கள் ஜாதி பெண்களுக்கு தன் கணவனை தேர்ந்தெடுக்கும் அறிவை, தன்னம்பிக்கையை, பொரு ளாதாரத்தை, சுய உணர்வை அளியுங்கள். உணர்வில் பலமாக இருக்கும், சுய அறிவும், நல்லதை, கெட்டதை பகுத்துப் பார்க்கும் எந்தப் பெண் குழந்தையும் பதினெட்டு வயதில் ஓடிப்போக துணிய மாட்டாள். அதை விட்டு விட்டு நீங்கள் எது செய்தாலும் அது சமூக தீர்வாக இருக்காது என்றேன். அடிமைத்தனம் அதிக மாகும்.. இல்லா விடில் உங்கள் ஜாதியில் பெண்ணடிமை அதிகமாகி முன்னேற்றம் தடை படும்..கல்வி முதலியவற்றில் பின்னாடி செல்வீர்கள் ..அது இன்னும் உங்களுக்குத்தான் இழப்பு..என்று அவருக்கு ஏற்றார் போல சொன்னேன்.
lady beauty nov 1b
எனவே தாயாய், தமைக்கையாக், மனைவியாய் இயற்கையில் உணர்வுப் பூர்வமானவள் பெண். ஆனால் உணர்வுகளை எப்படி, எங்கு, எவ்வளவு காட்ட வேண்டும்..குறைக்க வேண்டும், மறைக்க வேண்டும், மறக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை யாருக்கும் செவிக் கொடுக்காது, எந்த நுகர்வோர் விளம்பரத்திற்கும் அசையாது..தான் இஷ்டப்படி..தனக்கு விருப்படி அன்பாக , பொறாமை இல்லாமல் இருப்பது சிறப்பும் அழகும்…ஆனால்.  எல்லா வற்றையயும் விட உணர்வுகளை மிகச்சரியாக தன்னம் பிக்கையுடன், சுயமாக கையாள தெரிந்த பெண்ணே மிக மிக அழகானவள்.

இந்த போஸ்ட் போட காரணமாயிருந்த Latha Arunachalam க்கும் எங்கள் மங்கை குழுமத்திற்கும் நன்றிகள்.

கிருத்திகா தரன்

Related Posts

error: Content is protected !!