மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய விருது!- விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய விருது!- விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின், சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் (மாற்றுத் திறனாளிகள் நலன்) அமைச்சகத்தால், மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுக்கென சிறப்பாக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள், மாற்றுத்திறனுடைய பணியாளர்கள் ஆகியோருக்கு 3.12.2014 அன்று புதுடெல்லியில் தேசிய விருதுகள் வழங்கப்படவுள்ளதையடுத்து சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. .
natinal disability award
மாற்றுத் திறனாளிகளில் சிறப்பாக பணிபுரிபவர்கள் / சுயதொழில் புரிபவர்கள், சிறந்த பணியமர்த்தப்படும் அலுவலர்/ நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பாக சேவை புரிந்த தனிநபர்/நிறுவனம், மாற்றுத் திறனாளிகளில் முன்னோடியாகத் திகழ்பவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையிலான சிறந்த செயல்முறை ஆராய்ச்சி பணி/ தொழில் நுட்பம் அல்லது கண்டுபிடிப்புகள், மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கிய சிறந்த மாவட்டம், சிறந்த படைப்பாற்றல் மிக்க மாற்றுத் திறனுடைய நபர்கள், சிறந்த படைப்பாற்றல் மிக்க மாற்றுத் திறனுடைய குழந்தை உள்ளிட்ட 14 பிரிவுகளில் மொத்தம் 58 தேசிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்/நிறுவனங்கள் இதற்கான படிவங்களை www.socialjustice.nic.in என்ற இணையதளத்தில் இருந்து கீழிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் அல்லது சென்னை கே.கே.நகரில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தக்க இணைப்புகளுடன் வருகிற 8.7.2014க்குள் 2 நகல்களில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரின் பரிந்துரையுடன் முதன்மைச் செயலாளர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், கே.கே. நகர், சென்னை 600 078 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 8.7.2014க்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!