’மாயோன்’ டைரக்டருக்கு கோல்ட் செயின் கிஃப்ட் கொடுத்த ஹீரோ சிபிராஜ்!

’மாயோன்’ டைரக்டருக்கு கோல்ட் செயின் கிஃப்ட் கொடுத்த ஹீரோ சிபிராஜ்!

சிறந்த கதைகள் கொண்ட திரைப்படங்களை தொடர்ந்து தந்து, வணிக வட்டாரங்கள், பொது பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் சிறந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளார் நடிகர் சிபிராஜ். அவரது சமீபத்திய திரைப்படமான ‘மாயோன்’ விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல், மர்மம் மற்றும் சாகச அம்சங்களுடன், புராண அம்சங்களைக் கலந்து முதல்-முறையாக எடுக்கப்பட்ட புது முயற்சிக்காக இப்படம் பொது பார்வையாளர்களிடமிருந்து பாராட்டு மழையை பெற்று வருகிறது. படத்தின் வெற்றியினை தொடர்ந்து, அதனை சிறப்பிக்கும் வகையில், நடிகர் சிபிராஜ், இயக்குநர் கிஷோர் அவர்களுக்கு ஒரு தங்கச் சங்கிலியை பரிசாக வழங்கியுள்ளார் நடிகர் சிபிராஜ். இப்படத்தில் சிறப்பான நடிப்பிற்காக நடிகர் சிபிராஜுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடதக்கது.

‘மாயோன்’ படத்தின் தயாரிப்பாளர்கள் விரைவில் இப்படத்தை தெலுங்கில் வெளியிட உள்ளனர், இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

“மாயோன்” ஜூன் 24, 2022 அன்று உலகளாவிய திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம் எல்லா தரப்பிலும், நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. Double Meaning Productions இந்த படத்தை தயாரித்துள்ளது. அற்புதமான கதைக்களம், பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் சிபிராஜ் மற்றும் பிற நடிகர்களின் பாராட்டத்தக்க நடிப்பிற்காக இப்படம் பெருமளவில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

error: Content is protected !!