மர்ம டெலிஃபோன் எக்ஸேஞ்ச் – 2437 – Exclusive

மர்ம டெலிஃபோன் எக்ஸேஞ்ச் – 2437 – Exclusive

இந்தியாவின் சாபம் – தவறான அரசியவாதிகள் தான். சென்னையில் இருந்தவர்களுக்கு 2004 – 2010 வரை சென்னை டெலிஃபோன்ஸாக இருந்த பி எஸ் என் எல் என்னும் நிறுவனம் தரை வழி தொடர்பில் நெ 1-ஆக இருந்ததை எல்லோரும் அறிவோம். இவர்கள் வீட்டுக்கு தேவையான இணைப்பு முதல் லீஸ் சர்க்யூட் எனப்படும் ஆப்டிக் ஃபைபர் கனெக்ஷன்களை கூட தருவது வழக்கம். அப்படி பட்ட சேவையை வழங்கிய இந்த பி எஸ் என் எல் – மத்திய மந்திரியாய் இருந்த தயாநிதி மாறன் மற்றும் சென்னை பொது மேலாளராய் இருந்த பிரம்மானந்தம், முன்னாள் துணை பொது மேளாலர் வேலுச்சாமி கூட்டுடன் – ஒரு தனி டெலிஃபோன் எக்ஸேஞ்சே அரசுக்கு தெரியாமல் நடத்தி வந்தது எவ்வளவு பேருக்கு தெரியும்?
ravi nag - telephones
சன்டிவி அலுவுலகம் – அண்ணா அறிவாலயத்தில் செயல்பட்டு கொண்டிருந்த காலத்தில் அண்ணா அறிவாலயத்தில் சன் டிவி அலுவுலகத்துக்கு 3 பி ஆர் ஐ லைன்கள் மூலம் சன் டிவியின் ஃபோன் மற்றும் ஃபேக்ஸ் இணைப்புகள் பெற்று வணிகம் செய்து வந்தனர். இந்த 3 பி ஆர் ஐகளுக்கு வாடகை மற்றும் மாத பில் சுமாராக 1.75 – 2.22 லட்சங்கள் வரை வரும். 2004ல் தகவல் ஒளிபரப்பு அமைச்சராய் பொறுப்பேற்ற உடன் செய்த முதல் காரியம் இந்த மூன்று பி ஆர் ஐ கனெக்ஷனை 1 பி ஆர் ஐயாக குறைத்தது. அப்போது டி டி ஹெச் / தினகரன் / சூரியன் எஃப் எம் என்று பல மடங்காய் உயரந்த வணிகத்துக்கு ஒரு பி ஆர் ஐ என்பது யானைக்கு சோளப்பொரி உருண்டை உணவு கதை தான். ஆனாலும் சன் டிவியின் அத்தனை அனலாக் டெலிஃபோன்களும் – மோட்டோரோல ஹைபிரிட் ஐ பி பெக்ஸ் என்னும் தொழில் நுட்பத்துக்கு மாற்றப்பட்டன. பின்பு கார்ட் டெலிஃபோனில் இருந்து கார்ட்லெஸ் டெலி ஃபோன் நிறுவபட்டு ஹை ஃப்ரீக்குவன்சியா “டாக்ஸீஸ் 3.5″ ஸ்பெக்டரத்தை யூஸ் செய்து 5 கிலோமீட்டர் அளவுக்கு அவர்களின் அலுவலக கார்ட்லெஸ் வேலை செய்யுமாறு பார்த்து கொண்டு ஒவ்வொரு கடை நிலை ஆட்களுக்கு கூட இந்த வசதியை கொடுத்தது சன் நிர்வாகம்.

இதனால் ஓபி வேன்கள் அதிகமாயிற்று – இப்படி ஒவ்வொரு டெலிஃபோன் சம்பந்தபட்ட இன்ஃப்ராஸ்ட்ரக்சரும் வளர்ந்தது ஆனால் அவர்கள் கோர் சோர்ஸான டெலி ஃபோன் கனெக்ஷன் மட்டும் வெறும் ஒரு பி ஆர் ஐக்கள் தான். ஒரு பி ஆர் ஐய் வைத்து எப்படி இந்த சாத்தியம் என நினைத்த பலருக்கு புரிய வில்லை அந்த ஹைபிரிட் மோட்டரோலாவின் ஈ பி பி எக்ஸின் இன்புட் லைனில் ஒரு ஃபைபர் சொருகபட்டிருந்தது.இந்த பைபர் தனியார் கான்ட்ரக்டர் மூலம் இரண்டே நாளில் அண்ணா அறிவாலயத்தில் இருந்து – எல்டாம்ஸ் சாலை வழியே – செயின்ட் மேரிஸ் ரோடு வழியே பார்க் ஷெரட்டனை தாண்டி போட் கிளப்பில் உள்ள கலா நிதி மாறனின் இல்லத்துக்கு இரண்டே இரவில் தரையை கிழித்து அனுமதியின்றி போடபட்டு ” 2437″ என்ற தனி டெலிஃபோன் எக்ஸேஞ்சே செயலபட்டது.

2437 எக்ஸேஞ் ஒரு அரசு கட்டிடத்தில் ஏதாவது ஒரு பி எஸ் என் எல்லின் ” நாக்” எனப்படும் ஒரு எக்ஸேஞ்சில் நிறுவபட்டு பின்பு அதை வைத்து பில்லிங்கில் முறை கேடு நடந்திருந்தால் கூட பரவாயில்லை – அரசு மந்திரியாய் இருந்த நெரத்த்தில் அரசு வைத்து நடத்த வேண்டிய ஒரு தொலை தொடர்பு எக்ஸேஞ்சை தன் பதவியை உபயோகபடுத்தி தன் அண்ணன் வீட்டில் நிறுவினர் அதுவும் அரசு செலவில். இந்த 2437 எக்ஸேஞ்சில் 323 லைன்களை வைத்து அதன் மூலம் அதை சிங்கிள் ஆப்டிக் ஃபைபர் மூலம் அறிவாலயத்தில் உள்ள சன் டிவி அலுவலகத்திர்க்கு கொண்டு சேர்த்து அதன் மூலம் தான் அத்தனை தொழிலையும் சிறப்பாக செய்தனர் அதுவும் மக்களின் வரி பணத்தில்.

பத்திரிக்கையாளர் குருமூர்த்தி தான் இதை முதலில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து வழக்கை தொடுக்க சி பி ஐ 2007ல் தயாநிதி மாறனை விசாரித்த போது ” 2437 – 1500″ என்ற எண் தயானிதி மாறனின் இல்லத்தில் கண்டனர். ஆனா அந்த தொலைப்பேசி இணைப்பு மாறனின் பெயரில் இல்லாமல் – பி எஸ் என் எல் மேலாளர் – சென்னை தொலைப்பேசி இனைப்பகம்” என்ற பெயரில் இயங்கி வந்ததை கண்டறிந்தனர். அதன் பின் அங்கே இருந்த இன்னொரு லீஸ் சர்க்யூட் இனைப்பான – 2347 1515 என்ற இனைப்பு இயங்குவதை கண்டனர். ஆனால் அந்த தொலைப்பேசி ஒரு நிமிடத்துக்கு ஆயிரத்து மேற்பட்ட கால்கள் மற்றும் ஒரு நாளில் இரண்டு லட்சம் கால்களுக்கு மேல் பதிவாகி மார்ச் 2007 மாதபில் மட்டும் 48 லட்சத்தி 72ஆயிரத்தி 27 கால்கள் உள் நாட்டு / வெளி நாட்டு / வீடியோ அப்லோட் / வீடியோ டவுன்லோட் என மின்னல் வேகத்தில் செயல்பட்டு கொண்டு இருந்த இந்த அரசு சார்ந்த தனியார் எக்ஸேஞ்ச் மூலம் இந்திய தொலை தொடர்பு துறைக்கு ஆன நஷ்டம் ஆயிரம் கோடிகளில்.

இந்த கேஸ் அப்படியே கிணற்றில் தூக்கி போட்ட கல்லாகி போனது ஆனால் போன மாதத்தில் – சன் டிவி முன்னாள் சி ஈ ஓ – சக்ஸேனாவிடம் விசாரித்த சி பி ஐயிடம் இது நிர்வாக முடிவு இதில் டெக்னிக்கல் விஷயத்தை பற்றி நான் ஒன்றும் சொல்வதற்க்கு இல்லை என்று ஒதுங்கி கொண்டாலும் தயாநிதி மாறனிடம் போன மாதம் டெல்லியில் விசாரித்தது. விரைவில் கலா நிதி மாறனிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ளது சி பி ஐ – இதன் மூலம் பெரும் புயல் ஒன்று 2ஜி அலைக்கற்றை ஊழலுக்கு அடுத்து ஒன்று அம்பலமாகும் என தெரிகிறது. – நன்றி – குருமூர்த்தி.

All Copyrights Reserved – Aanthai Reporter

error: Content is protected !!