மருத்துவமனை நிர்வாகத்தில் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு!
மேல்நிலை வகுப்பில் அறிவியல் மட்டுமல்லாமல் வணிகவியல் பாடங்கள் எடுத்து படித்தவர்களுக்கும், மருத்துவத்துறையில் நல்ல வாய்ப்புகள் நிறைந்து இருக்கின்றன. அவற்றில் முக்கியமான படிப்பு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சுகாதார மேலாண்மை. மேல்நிலை வகுப்பில் அறிவியல் மட்டுமல்லாமல் வணிகவியல் பாடங்கள் எடுத்து படித்தவர்களுக்கும், மருத்துவத் துறையில் நல்ல வாய்ப்புகள் நிறைந்து இருக்கின்றன. அவற்றில் முக்கியமான படிப்பு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சுகாதார மேலாண்மை.
பாரதத்தில் மருத்துவம் மற்றும் மருத்துவ தொழில் நுட்ப வாய்ப்புகள் வாய்ப்புகள் மட்டுமல்லாமல், மருத்துவமனை நிர்வாகத்திலும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் பிபிஏ – மருத்துவமனை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் படிப்பிற்கும் நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது. சென்னை, தி சங்கர நேத்ராலயா அகாடெமியில் மூன்று வருட பிபிஏ – மருத்துவமனை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் படித்தவர்கள் மற்றும் இரண்டு வருட எம் பி ஏ மற்றும் எம் ஹெச் ஏ – படித்த பட்டதாரிகள், மருத்துவமனைகளில் பொதுமக்கள் தொடர்பு, ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ், மருத்துவமனைகளில் நிர்வாகம், கணக்கியல், வரவேற்பகங்கள், ஹவுஸ் கீப்பிங் நிர்வாகம், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
பிபிஏ – மருத்துவமனை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் படித்தவர்கள் எம் பி ஏ மற்றும் தமிழ் நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவப்பல்கலைக்கழகம் வழங்கும் எம் ஹெச் ஏ – மாஸ்டர் ஆஃப் ஹெல்த் கேர் அட்மினிஸ்ட்ரேஷன் போன்ற படிப்புகள் படிக்கலாம். இந்த படிப்புகள் படித்தவர்கள் மருத்துவமனைகள் மற்றும் தர மேம்பாட்டு மேலாண்மை துறைகளில் அனுபவங்கள் பெற்று சிறந்த வேலை வாய்ப்புகளை பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.