மத்திய அரசின் குரூப் பி & சி பணி வாய்ப்பு!
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள குரூப் பி, சி பணியிடங்களுக்கான பணியாளர்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எஸ்எஸ்சி- ஆல் நடத்தப்படும் போட்டி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தற்போது மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள 76 குரூப் பி, சி பணியிடங்களுக்கான அறிவிப்பை சென்னை மண்டல எஸ்எஸ்சி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 24க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 76
பணியிடம்: தமிழ்நாடு
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Technical Superintendent – 03
பணி: Workshop Superintendent – 01
பணி: Senior Instructor (Weaving) – 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Textile Technology, Handloom Technology துறைகளில் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் அல்லது டிபளமோ முடித்து 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Mechanical Engineering துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Medical Attendant – 34
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் முதலுதவி பிரிவில் சான்றிதழ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: Lady Medical Attendant – 15
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200
வயதுவரம்பு: 18 – 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் முதலுதவி பிரிவில் சான்றிதழ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: Conservation Assistant – 2
சம்பளம்: மாதம் ரூ.25,500 – 81,100
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Junior Conservation Assistant – 09
சம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சிவில் பொறியியல் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: Evaluation Assistant – 01
சம்பளம்: மாதம் ரூ.29,200 – 92,300
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: புள்ளியியல், கணிதம், பொறியியல், சமூகவியல், சமூக வேலை பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக் கேவண்டும்.
தேர்வுக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் அட்டெஸ்ட் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Regional Director (SR),
Staff Selection Commission,
Southern Region, II Floor , EVK Sampath Building,
DPI Campus, College Road,
Chennai – 600 006.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2017
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 02.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sscsr.gov.in அல்லது www.ssconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து அல்லது ஆந்தை வேலைவாய்ப்பு என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.