மத்திய அரசின் ஒட்டுமொத்த இணையதளங்களும் முடங்கி சீரானது!

மத்திய அரசின் ஒட்டுமொத்த இணையதளங்களும் முடங்கி சீரானது!

மத்திய அரசு சார்பில் இயங்கும் எல்லா துறைகளின் இணையதளங்களும் நேற்று மாலை ஒட்டுமொத்தமாக முடங்கி போயின. விசாரித்ததில் தவறான இயக்கத்தினால் அவை முடக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து தொழில்நுட்ப வல்லுனர்கள் கோளாறுகளை சரி செய்து சில மணி நேரங்களில் மீண்டும் இணையதளங்களை இயங்கவைத்தனர். இணையதளங்களை முடக்கும் வகையில் சைபர் தாக்குதல் ஏதும் நடத்தப்படவில்லை என்று மத்திய அரசு உறுதி செய்துள்ளது. ”
cber attack ind web
நேற்று மாலை முடங்கிய பிரதமர் அலுவலகம், மக்களவை, மாநிலங்களவை, நிதியமைச்சகம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் இணைய தளங்களின் தொழில்நுட்ப கோளாறுகள் உடனடியாக சரிசெய்யப்பட்டு இரவு ஒன்பது மணியளவில் மீண்டும் இயங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து சட்டம், எண்ணெய் மற்றும் விவசாயத்துறை இணையதளங்களை நேற்று தொடர்பு கொண்டபோது, குறிப்பிட்ட யு.ஆர்.எல்.ஐ காணவில்லை என்று பதில் தான் கிடைத்தது. அதிகாரிகள் தரப்பில் தொழில்நுட்ப தடுமாற்றம் காரணமாக இணையதளங்கள் செயலிழந்ததாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!