மண் பானை குளிர்சாதனம் ! ரூ 600 செலவில் உருவாக்கிய விவசாயின் மகன்
இன்றைய காலக்கட்டத்தில் தினம்தோறும் புதிது புதிதாக பல வகை உலோக பாத்திரங்கள் அறிமுகம் ஆகின்றன. அவற்றின் நன்மை தீமைகளை பயன்படுத்தினால் தான் அறிய முடியும். ஆனால் அது போல் இல்லாமல் மண்பானைகள் பல நூற்றாண்டுகளாக ஆரோக்கிய சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ருஸ்தாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கமலேஷ் மாதுர்யா. மெக்கானிக்கல் பொறியியல் மாணவரான மாதுர்யா மண் பானையை பயன்படுத்தி புதிய குளிர்சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளார். மண் பானை மற்றும் சில மின்சாதனங்களை பயன்படுத்தி இந்த குளிர்சாதனத்தை கமலேஷ் உருவாக்கியுள்ளார்.
கூலருடன் கூடியை இந்த குளிர்சாதன பானையை உருவாக்க ரூ. 800 மட்டுமே செலவு என கமலேஷ் கூறியுள்ளார். இந்த பானைக்கு தேவையான மின்சாரம் சூரிய ஒளியில் இருந்து பெறப்படுகிறது. சூரிய ஒளிசக்தியை கொண்டே இந்த குளிர்சாதனம் செயல்படுகிறது. மின்சாரம் வழங்க பானையில் 5 வாட் சூரிய தட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் ஏழை மக்களுக்கும் ஒரு வசதியான வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்ற யோசனையில் இருந்து இதனை உருவாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். பானையின் ஒரு பகுதியில் கூலர் பேன் பொருத்தப்பட்டுள்ளது. கமலேஷ் கூலர் பேன் இயக்கத்திற்கு உதவும் வகையில் 6 வாட் மோட்டார் பயன்படுத்தியுள்ளார். பானையில் தண்ணீரை சுத்திக்கரிக்க அவர் அதில் ஒரு வடிகட்டியை நிறுவியுள்ளார். இந்த கண்டுபிடிப்பு ஏழை மக்களுக்கு மிகவும் பயனாக இருக்கும். விரைவில் இந்த சாதனம் விற்பனைக்கு வரலாம் என்று இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.