போலி மருத்துவர்களை கண்டறிய வந்தாச்சு ஸ்மார்ட் நேம் போர்ட்!

போலி மருத்துவர்களை கண்டறிய வந்தாச்சு ஸ்மார்ட் நேம் போர்ட்!

சென்னை மற்றும் தென் தமிழக பகுதிகளில், டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களால் அதிகளவில் பாதிப்பும், உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் தமிழகத்தில், 50 ஆயிரம், “போலி’ டாக்டர்கள் உள்ளனர், இவர்கள், மருத்துவ சிகிச்சை அளிப்பதால், உயிர் பலி, நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, தமிழகத்தில் மட்டும், 2,000 போலி டாக்டர்களை, போலீஸார் கைது செய்தனர். இவர்கள், நீதிமன்றத்தில், 500, 1,000 ரூபாய், அபராதம் கட்டி விட்டு, மீண்டும், மருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர்.போலி டாக்டர்களை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள், “போலி மருத்துவர்கள் ஒழிப்பு சட்டம்’ கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பட்டு வந்தது.
fake doctors nov 4
இதனிடையே தமிழகத்தில் உள்ள பதிவு செய்த எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவர்களுக்கு ஸ்மார்ட் நேம் போர்டு வசதியை தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் அறிமுகம் செய்துள்ளது.இனி, சிகிச்சைக்குச் செல்லும் பொது மக்கள், மருத்துவரிடம் ஸ்மார்ட் நேம் போர்டு இருக்கிறதா என்பதை பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது இது குறித்து தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில், “இந்த ஸ்மார்ட் நேம் போர்ட்டில் புகைப்படத்துடன் கூடிய பெயர் இருப்பதால், போலி மருத்துவர்களை மக்களே கண்டறிந்து கொள்ளலாம். இதன் மூலம் உரிய மருத்துவரிடம் சிகிச்சை பெறவும், போலி மருத்துவர்கள் குறித்து புகார் அளிக்கவும் இயலும்.இந்த ஸ்மார்ட் நேம் போர்ட் வசதி இதுவரை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழகத்தில் மட்டுமே முதல் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் தமிழகம் மற்றும் புதுவையில் 1,13,823 மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர். மருத்துவரின் பதிவெண்ணை எஸ்எம்எஸ் அல்லது க்யூ.ஆர். மூலம் அனுப்பி மருத்துவரின் படிப்பு உள்ளிட்ட வற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!