பொய்யை கண்டறியும் சாப்ட்வேர்!

பொய்யை கண்டறியும் சாப்ட்வேர்!

சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை ஆண், பெண் இருபாலரும் பொய் பேசுகிறார்கள். சிலர் குறைவாக மற்றும் சிலர் நிறைய. சிலரால் யோசிக்காமலேயே பொய் பேசுவதற்கு முடியும். அவ்வளவு முதிற்சி. மற்றும் சிலரால் யோசித்துதான் பேசுவதற்கு இயலும். சில தொழில்களில் பொய் பேசுபவர்கள்தான் அதிகமாகக் காணப்படுகின்றார்கள். உதாரணமாக வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், தரகர்கள், விற்பனை பிரதிநிதிகள், அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள், வக்கீல்கள் இன்னும் பலர். தொழிலில் வெற்றி பெற பொய் அவசியமாகி விடுகிறது இவர்களுக்கு.சரி, யார் வேண்டுமானாலும் பொய் பேசிவிட்டுப் போகட்டும். அந்த பொய் நம்மைப் பாதிக்கக் கூடாது என்றும் நாம் எல்லோரும் விரும்புகிறோம். இது நல்ல எண்ணம்தான். எனவே, ஒருவர் பேசுவது உண்மையா அல்லது பொய்யா என்று நாம் தெரிந்து கொள்ள கண்டிப்பாக ஆசைப்படுவோம். அதைக் கண்டுபிடிக்க முடியுமா?என்று யோசித்த இங்கிலாந்தில் உள்ள எசெக்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி மஸ்சிமோ போசியோ, இத்தாலி விஞ்ஞானி டொமாசோ போர்னசியாரி ஆகியோர் இணைந்து, பொய் எழுதினால் அதை கண்டுபிடிக்கும் சாப்ட்வேரை கண்டுபிடித்துள்ளனர். ஒரு பத்தியில் ஒரு குறிப்பிட்ட வார்த்தை எத்தனை தடவை இடம்பெற்றுள்ளது என்பதை கண்டறியும் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்த சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.
lie detect software
இந்த சாப்ட்வேர் திறம்பட செயல்படுகிறதா என்பதை அறிய, இத்தாலி கோர்ட்டுகளில் சாட்சிகளும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் அளித்த வாக்குமூலங்களை படித்துப் பார்க்கும் பணியில் சாப்ட்வேர் ஈடுபடுத்தப்பட்டது. அதில், வாக்குமூலத்தில் எந்தெந்த இடத்தில் பொய் சொல்லப்பட்டுள்ளது என்பதை சாப்ட்வேர் கண்டுபிடித்தது. இது, 75 சதவீதம் துல்லியமாக செயல்படுமாம்.

இதுபோல், ஆன்லைனில் இடம்பெறும் புத்தக விமர்சனங்கள், ஓட்டல்கள் பற்றிய விவரங்களிலும் பொய்யை கண்டுபிடித்து விடுமாம். எனவே, ஆன்லைன் புத்தக விமர்சனங்களை அதன் ஆய்வுக்கு உட்படுத்தும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts

error: Content is protected !!