பூணூல் போட்ட ஆனந்த விகடன் ஸ்ரீனிவாசன்! – முரசொலி விழாவில் கமல் பேச்சு!

பூணூல் போட்ட ஆனந்த விகடன் ஸ்ரீனிவாசன்! – முரசொலி விழாவில் கமல் பேச்சு!

திமுக நாளேடான முரசொலியின் பவளவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசிய போது, “சிவாஜி பேசிய வசனம் எனக்கு தெரியும், சிவாஜி தான் அந்த வசனத்தை எழுதினார் என்று நினைத்தேன்., ஆனால் வயது வந்தபோது அந்த வசனத்தை எழுதிய முதியவருக்கு ரசிகனானேன், ரஜினி விழாவிற்கு வருவாரா என்று கேட்டேன், வருவார் என்றார், பேசுவாரா என்று கேட்டேன், பேச மாட்டார், கிழே பார்வையாளராக அமர்ந்திருப்பார் என்றார், நமக்கு ஏன் வம்பு நாமும் அப்படியே அமர்ந்திருப்போம் என்று தான் நினைத்தேன், ஆனால் இவ்வளவு பெரிய வாய்ப்பை இழந்திருப்போம் பங்கேற்க வேண்டும், என்று முடிவு செய்தேன், தற்காப்பு அல்ல: தன்மானம் தான் முக்கியம் என்பதற்காக பேச வந்தேன்.

இவ்வளவு பத்திரிகையாளர்களிடையே பாதியில் நிறுத்திய கடைநிலை பத்திரிகையாளர் அமர வாய்ப்பு கிடைத்ததற்காக பெருமையடைகிறேன், 1983 ஆம் ஆண்டே திமுக தலைவர் கருணாநிதியிடமிருந்து டெலிகிராம் செய்தி வந்தது. இன்று வரை அது யாருக்கும் தெரியாது. அதில் நீங்கள் ஏன் திமுகவில் சேரக்கூடாது என்று கேட்கப்பட்டிருந்தது. அந்த டெலிகிராமை அப்படியே வைத்து விட்டேன், அவரும் அதுப்பற்றி என்னிடம் கேட்கவே இல்லை. அந்த பெருந்தன்மை மூதறிஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் உரியது. அதற்காக அவரை பாராட்டுகிறேன். இந்த மேடையிலும் அது பற்றி கேட்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்,

இங்கே மாறுப்பட்ட கருத்துடையவர்களும் பங்கேற்று பேசினார்கள், இது ஆரோக்கியமானது. பாராட்டத்தக்கது. இந்த சூழ்நிலை தமிழகத்தில் வரவேண்டும், ஆனந்த விகடன் சீனிவாசன் பேசும்போது. தங்களது பத்திரிகையை பூணூல் என்று விமர்சித்ததாக குறிப்பிட்டார், பூணூல் போட்ட அவரே சந்தோஷமாக வந்திருக்கும்போது, பூணூலே போடாத கலைஞானி இந்த விழாவிற்கு வருவதில் என்ன ஆச்சரியமிருக்கிறது., திராவிடம் இதோடு முடிந்து விட்டது என்று பேசுகிறார்கள், இந்த திராவிடம் ஜனகனமன இருக்கும்வரை திராவிடம் இருக்கும் என்று ஒரு பேட்டியில் தெரிவித்தேன், தமிழகம் தென்னாடு மட்டுமல்ல: திராவிடம் நாடு தழுவியது. இந்த அரங்கு மட்டுமல்ல: மக்கள் சக்தியை உள்ளவரை திராவிடம் இருக்கும் இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்,

முன்னதாக கவிஞர் வைரமுத்து பேசுகையில் எதிர்க்கட்சியாக இருந்து, அரசு அரங்கத்தை பிடித்து விட்டார், அரசு அரங்கத்ததை பிடித்தவருக்கு அரசாங்கத்தை பிடிக்க தெரியாதா என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தார், மேலும் அவர் பேசுகையில் மு.க.ஸ்டாலின் தலைவரின் மகனாக மட்டுமல்ல: எங்களில் ஒருவராகி விட்டார், அவர் சிங்கத்தின் இருதயத்தையும் கொக்கின் பொறுமையையும் யாணையின் நினைவாற்றலையும் ஒட்டகத்தையும் உறுதியையும் பெற்றிருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்,

error: Content is protected !!