புதுச்சேரியில் பாஜக & அதிமுக-வுக்கு க்கா –பாமக அதிரடி!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ல் ஒரே கட்டமாக நடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பெரிய கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதிப்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்து பாமக தேர்தலை எதிர்கொள்கின்றது. ஆனால், புதுவையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவிற்கு உரிய பிரதிநிதித்துவம், உரிய அங்கீகாரம் இல்லாத காரணத்தினால் புதுவையில் 12 தொகுதிகளிலும், காரைக்காலில் 3 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என பாமக செயற்குழு ஒரு மனதாக தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக இன்று அறிவித்திருந்த நிலையில், பாமகவின் இந்த நிலைப்பாடு அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.