கலைஞர் கருணாநிதியை பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!

கலைஞர் கருணாநிதியை  பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!

திமுக தலைவர் கருணாநிதி, கடந்த ஒராண்டாக உடல்நலம் குன்றிய நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார், அண்மையில் கோடம்பாக்கம் முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு சென்று அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார், இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், நேற்று இரவு 8-30 மணிக்கு கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டிற்கு வந்தார், அவரை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர் இதன்பின்னர் கருணாநிதியை ராமதாஸ் நேரில் சந்தித்து பேசினார்,

பத்து நிமிடம் நீடித்த இந்த சந்திப்புக்கு பின்னர் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

திமுக தலைவர் கருணாநிதியை நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது.. மு.க.ஸ்டாலின் என்னை பற்றி சொன்னதும் மகிழ்ச்சியடைந்தார், பேச முயற்சித்தார்.ஆனால் முடியவில்லை. என்னுடன் வந்திருந்த பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி ஆகியோருக்கு தலையில் கைவைத்து கருணாநிதி ஆசி வழங்கினார், அவரை முன்பு காவேரி மருத்துவமனையில் சந்தித்தேன்., இப்போது கருணாநிதி உடல்நலம் தேறி வருகிறார், ஆரோக்கியமாக இருக்கிறார் என்று ராமதாஸ் தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!