பாஜக நிறைவேற்றிய அனைத்து திட்டங்களையும் தொடங்கியது காங்கிரஸ்தான்- குஷ்பு

பாஜக நிறைவேற்றிய அனைத்து திட்டங்களையும் தொடங்கியது காங்கிரஸ்தான்- குஷ்பு

பாஜகவில் இணைந்தது மிகுந்த சந்தோஷமாக உள்ளது. பாஜகவில் இருக்க முக்கியக் காரணம் மாநிலத் தலைவர் முருகன் எடுத்த முக்கிய முயற்சிதான். அவர் எடுத்த முயற்சியால்தான் பாஜகவில் இணைந்துள்ளேன். நன்றி முருகன் சார். ஒரு கட்சி பலப்படுவதற்காக ஒரு தலைவர் எல்லோரிடமும் பேசி இந்தக் கட்சிக்கு வாருங்கள் என்று எல்லோருக்கும் புரியவைத்து அழைக்கிறார்.

இன்னொரு தலைவர் 6 வருடங்களாக அந்தக் கட்சியில் இருந்ததற்குப் பின்னரும் வெறும் நடிகையாகத்தான் பார்த்தேன் என்று சொல்கிறார். காங்கிரஸில் இருக்கிறவர்களுக்கும் மரியாதை கிடையாது. வெளியில் போகிறவர்களுக்கும் மரியாதை கிடையாது. ஒருவர் வெளியே போகிறார் என்றால், ஏன் போகிறார் என்று யோசிக்கும் திறமையும் கிடையாது. 6 வருடம் கழித்துத்தான் நான் நடிகையாக இருப்பதாகத் தெரிகிறதா? என்று கேள்வி கேட்டார் நடிகை குஷ்பு

முன்னதாக காங்கிரஸிலிருந்து விலகி நேற்று பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு இன்று காலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் பாஜக சார்பில் அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன் பின்னர் கமலாலயத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நீண்ட யோசனைக்குப் பின்னரே நான் பாஜகவில் இணைந்துள்ளேன். நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால், பாஜக ஆட்சி அமைக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எனது கொள்கை.

இன்றும் நான் பெரியாரின் கொள்கைவாதி தான். பெரியார் பெண்களுக்காக குரல் கொடுத்தவர். அதைத் தான் நான்விரும்புகிறேன். ஆனால், அவருடைய அனைத்துக் கருத்துக்களையும் நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். பெரியார் என்றால் அரசியல் பேசக்கூடாது. ஆனால் திமுக அரசியல் பேசுகிறது.

எதிர்க்கட்சியில் இருக்கும்போது அதற்கான வேலையைத் தான் செய்ய வேண்டும். ஆளும்கட்சியை எதிர்த்துதான் ஆக வேண்டும். அந்த வேலையைத் தான் செய்தேன். ஆனால், அதற்காக ஆளும்கட்சி செய்த எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஓரிடத்தில் இருக்கும் வரை அந்த இடத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். பாஜக நிறைவேற்றிய அனைத்து திட்டங்களையும் தொடங்கியது காங்கிரஸ் தான்.

நான் பதவிக்காக பாஜகவுக்கு வரவில்லை. தமிழகத்தில் பாஜகவில் எனக்கு முன்னோடிகள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள்.

அதுமட்டுமின்றி எனது கணவர் சுந்தர் சிகூறியெல்லாம் நான் பாஜகவில் சேரவில்லை” என்றார்.