பழங்குடியின சமூகத்தில் பிறந்த திரௌபதி சமூகத்திற்கே பாதுகாப்பில்லை!

ந்திய குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் பதவிகாலம் முடிந்துவிட்டது. புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க ஆளும் கட்சியின் சார்பில் திரௌபதி முர்மு என்ற பழங்குடிப் பெண் அறிவிக்கப்பட்டுள்ளார். யார் இந்த திரௌபதி? ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக இருந்தவர் . இவர் ஆளுநராக இருந்தபோதுதான் அதானியின் நிலக்கரி ஆலைக்காக பழங்குடி மக்களின் சுமார் 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி பழங்குடி மக்களிடமிருந்து அநியாயமாக பறித்து கொடுக்கப்பட்டது. அதற்கு பழங்குடி மக்களின் பிரதிநிதி என்று சொல்லப்பட்ட திரௌபதிதான் பழங்குடி மக்களுக்கு எதிராக ஒப்பதல் அளித்தார்.

இந்து மதத்திலிருந்து பழங்குடியினர் அதிகளவில் கிருஸ்தவ மதத்தை தழுவுகிறார்கள் என பாஜக பொய் பிரச்சாரம் செய்தும் மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவந்து அதை நடைமுறை படுத்த முயன்றபோது அதை எந்த வித ஆய்வும் செய்யாமலும், குறைந்தபட்சம் தன் இனத்திற்கு எதிராக இப்படியொரு சட்டத்தை கொண்டு வருகிறார்கள் என்ற சுய அறிவுகூட இல்லாமலும்,இது பழங்குடி மக்களின் மதச் சுதந்திரத்திற்கு எதிராக உள்ளதே நாம் ஒப்புதல் அளிப்பதன் மூலம் பழங்குடி மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் அதை நாம் அனுமதிக்கக்கூடாதுஎன்றெல்லாம் கொஞ்சம் கூட சிந்திக்காமல்,பாஜக சொல்கிறதே நமக்கு மக்களை விடவும் அவர்களின் உரிமைகளை விடவும் பதவியே பெரிது அதை காப்பாற்ற வேண்டும் என்றால் பாஜக சொல்வதை செய்யவேண்டும் என்கிற போக்கில் மதமாற்ற தடைச்சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளித்தவர் தான் இந்த திரௌபதி..

அதாவது நாடுமுழுவதும் உள்ள பழங்குடிகளின் வாழ்வியல் மிகவும் துயரமானது. சொல்லொனா துன்பங்களை உள்ளடக்கியது.. குறைந்தபட்சம் பழங்குடியின சமூகத்தில் பிறந்த திரௌபதி அந்த சமூகத்திற்கே அவர்களுக்கு பாதுகாப்பாக இல்லாமல் அவர்களுக்கு எதிரான நிலையில் இருக்கும் போது இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் நலன்களுக்காக செயல்படுவார் என்பது எந்த அளவிற்கு சாத்தியம்..

-மா. ஈழவேந்தன்
ஆதித் தமிழர் பேரவை

error: Content is protected !!