பள்ளி குழந்தைகள் கூடுமிடத்தில் நொறுக்கு தீனி விற்க தடை : மத்திய அரசு அதிரடி திட்டம்!

பள்ளி  குழந்தைகள் கூடுமிடத்தில் நொறுக்கு தீனி விற்க தடை : மத்திய அரசு அதிரடி திட்டம்!

உலகம் முழுவதும் சுமார் 4 கோடியே 50 லட்சம் பள்ளி குழந்தைகள் அதிக எடை மற்றும் குண்டானவர்களாக உள்ளனர். இது நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளாக கருதப்படுகிறது. அவற்றில் உள்ள அளவுக்கு அதிகமான இனிப்பு, உப்பு, மற்றும் கொழுப்பு படிவங்களால் தான் இது போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.எனவே, பள்ளிகள், விளையாட்டு மைதானங்களில் இது போன்ற நொறுக்கு தீனிக்கு தடை விதிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளதைய்டுத்து நொறுக்குத் தீனிகளை பள்ளி குழ்ந்தைக்ள் கூடும் இடங்களில் விற்பதற்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
snakls alert
டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள நொறுக்கு தீனிகளை சாப்பிடும் இளைஞர்களுக்கு உயிரணுக்கள் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அமெரிக்கா, ஸ்பெயின் நாடுகளின் ஆராய்ச்சி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ஹார்வேர்டு பல்கலைக்கழகம், ஸ்பெயினின் முர்சியா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் வெளியான தகவல் வருமாறு: ஊட்டச்சத்து உணவை சாப்பிட்டு வந்த 18 முதல் 22 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களைவிட ஜங்க் புட் எனப்படும் நொறுக்கு தீனி, சாட் வகைகளை அதிகம் சாப்பிட்டு வந்த இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை குறைந்தது ஆய்வில் தெரியவந்தது.இதனிடையே குழந்தைகளின் உடல் நலத்தை கெடுக்கக் கூடிய விதவிதமான நொறுக்குத் தீனிகளும், குளிர்பானங்களும் கடைகளில் விற்கப்படுகின்றன. இவற்றில் ருசியை அதிகரித்து குழந்தைகளை ஈர்ப்பதற்காக, உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ரசாயன பொருட்கள் கலக்கப்படுகின்றன. இதனால் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே உடல் பருமன் உள்ளிட்ட பலவிதமான நோய்கள் வருகின்றன. எனவே, நொறுக்கத் தீனி விற்பனையை கட் டுப்படுத்தவும், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் கிடைக்க வழி செய்யவும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி அதிரடி திட்டத்தை அமல்படுத்த பரிசீலித்து வருகிறார்.

இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளின் கேன்டீன்களில் நொறுக்குத் தீனிகளை விற்க தடை விதிப்பது பற்றி மேனகா காந்தி பரிசீலித்து வருகிறார். ‘‘பள்ளி கேன்டீன்களில் மாணவர்களுக்கு தரமான, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைக்க செய்வதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். அதோடு, நொறுக்குத் தீனிகளில் கலக்கப்படும் ஆபத்தான பொருட்கள் பற்றியும், இவற்றை சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய தீங்குகள் பற்றியும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்’ என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.முன்னதாக றிப்பாக, நர்சரி மற்றும் தொடக்க பள்ளிகள், பள்ளிகளின் விளையாட்டு மைதானங்கள், குழந்தைகள் ஆஸ்பத்திரிகள், குழந்தைகள் நல மையங்கள் மற்றும் குழந்தைகள் கூடும் இடங்களில் இவற்றின் விற்பனைக்கு அந்தந்த நாடுகளின் அரசுகள் கடுமையான தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆரோக் கியமான உலக சமுதாயத்தை உருவாக்க முடியும் என உலக சுகாதர மையம் தெரிவித்திருந்தது.

error: Content is protected !!