பணிப்பெண்களையே விற்பனை செய்யும் வணிக வளாகம் – சிங்கப்பூர் அதிர்ச்சி

பணிப்பெண்களையே விற்பனை செய்யும் வணிக வளாகம் – சிங்கப்பூர் அதிர்ச்சி

சிங்கப்பூரில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றில் சந்தைப் பொருட்களைப் போல் பணிபெண்களை காட்சிப்படுத்தி விலைக்கு விற்கும் அவலம் மனித உரிமையாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
singapore-maid sale
சிங்கப்பூரில், இந் தியா, இலங்கை, பாகிஸ் தான், வங்கதேசம், இந் தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த, இரண்டு லட்சம் பெண் கள் வீட்டு வேலை செய் யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.இதனிடையே அங்குள்ள புக்கிட் திம்மா ஷாப்பிங் சென்டரில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மியான்மர் போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள், ‘வீட்டு வேலையாள்’, ‘குழந்தைகள் (அ) முதியோர்களை பராமரிப்பவர்’, ‘குடும்பத்தை நிர்வகிப்பவர்’ என்னும் அடையாளப் பெயர் பலகையுடன் வரிசையாக நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வணிக வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தங்களின் உழைப்புத் திறனை காட்டும் வகையில் இந்தப் பெண்கள், இஸ்திரி போட்ட துணிகளையே மீண்டும், மீண்டும் இஸ்திரி போட்டும், அழ முடியாத பொம்மைகளை தொட்டில்களில் போட்டு ஓயாமல் ஆட்டியும், முதியோர் அமரும் காலி சக்கர நாற்காலிகளை வெகு லாவகமாக கடையை சுற்றி தள்ளிக் கொண்டும் திரிகிறார்கள்.

இவர்களில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பணிப்பெண்கள் விரைவாக விலை போய்விடுவதாகவும், பிரச்சனைக்குரியவர்கள் என கருதப்படுவதால் மியான்மர் நாட்டு ‘சரக்கு’கள் தேங்கி கிடப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Posts

error: Content is protected !!