பட்டத்தாரிகளுக்கு பெட்ரோலிய நிறுவன பணி!

பட்டத்தாரிகளுக்கு பெட்ரோலிய நிறுவன பணி!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் பி.பி.சி.எல்., நிறுவனம் பார்சூன் 500 நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் நவரத்னா நிறுவனங்களில் இதுவும் ஒன்று என்பது மற்றொரு சிறப்பாகும். இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Bharat petro
பிரிவுகளும் காலியிடங்களும்: பி.பி.சி.எல்., நிறுவனத்தில் கெமிக்கலில் 30, சிவில் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் தலா 2, எலக்ட்ரிகலில் 4, எலக்ட்ரானிக்ஸில் 6, மெக்கானிகலில் 15 மற்றும் சேப்டி பிரிவில் 2 காலியிடங்கள் உள்ளன.

வயது: 01.10.2014 அடிப்படையில் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

ஸ்டைபண்டு: இந்தப் பதவிக்கான பயிற்சியில் அமர்பவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஸ்டைபண்டாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: முதலில் இந்த நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று முழுமையான விபரங்களை அறியவும். இதன் பின்னர் பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பம் மற்றும் இதர இணைப்புகளை சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.
Senior Manager (Recruitment & Promotion), BPCL-Kochi Refinery, Ambalamugal, Kochi-682 302
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.06.2014,
இணையதள முகவரி: <http://www.bpclcareers.in/Images/G_AP_62.pdf>

error: Content is protected !!