பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 29ம் தேதி தொடக்கம்?

பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 29ம் தேதி தொடக்கம்?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 29ம் தேதி தொடங்க உள்ளது. பிப்ரவரி 1ம் தேதி 2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பெரும் தொற்று காரணமாக நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை மத்திய அரசு ரத்து செய்தது. ஆனால், விவசாயிகள் பிரச்சினை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் படுவதை தவிர்க்கவே, குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால், பட்ஜெட் கூட்டத்தொடரும் ரத்து செய்யப்படலாம் என்ற வதந்திகள் உலா வந்தன.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29ம் தேதி தொடங்கும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இந்த பரிந்துரையை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 15ம் தேதி வரை நடக்க உள்ளது. அதில் பிப்ரவரி 1ம் தேதி 2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

கூட்டத்தொடரின் முதல் நாளான ஜனவரி 29ம் தேதி கூட்டு கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி மார்ச் 8ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தொடரில் தினமும் 4 மணி நேரம் நாடாளுமன்ற இரு அவைகளும் இயங்க உள்ளன.

இந்த கூட்டத்தொடரில் விவசாயிகள் விவகாரம் குறித்து பெரும் விவாதங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

error: Content is protected !!