பசுமை புரட்சி ஏற்படுத்திய இந்திய விஞ்ஞானிக்கு சர்வதேச விருது !

பசுமை புரட்சி ஏற்படுத்திய இந்திய விஞ்ஞானிக்கு சர்வதேச விருது !

உலகளவில் கோதுமை உற்பத்தியில் புரட்சி ஏற்படுத்திய இந்திய வேளாண் விஞ்ஞானி சஞ்சய் ராஜாராமுக்கு சர்வதேச விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினத்தன்று இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.உலகில் வாழும் மக்களுக்கு ஊட்டச்சத்துடன் நிலையான உணவு வழங்குவதன் முக்கியத்துவத்தை அறிந்து செயல்படும் வேளாண் விஞ்ஞானிகளை கண்டறிந்து, அவர்களுக்கு உலக உணவு பரிசு நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ம் தேதி விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
sanjay-rajaram
இந்தியாவில் பிறந்து தற்போது மெக்சிகோ குடியுரிமை பெற்ற வேளாண் விஞ்ஞானி சஞ்சய் ராஜாராம், கோதுமை பயிர் தொடர்பாக சுமார் 450 புதிய ரகங்களை உருவாக்கியுள்ளார். அவரால் உருவாக்கப்பட்ட புதிய ரகங்கள் உலகின் 51 நாடுகளில் பயிரிடப்பட்டு 200 மில்லியன் டன் கோதுமை விளைச்சலை கண்டுள்ளது. உலகளவில் கோதுமை மற்றும் மக்காச்சோளத்தில் பல்வேறு உயர்ரக விதைகளை கண்டுபிடித்து, அவற்றின் மூலம் விளைச்சலில் தனியார் மற்றும் அரசு தரப்பினரை ஊக்கப்படுத்தும் விதத்தில் அரிய சாதனை ஏற்படுத்திய சஞ்சய் ராஜாராமுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் ஜான் கெர்ரி நேற்றிரவு வாஷிங்டனில் அறிவித்தார்.சஞ்சய் ராஜாராமுக்கு சர்வதேச விருதுடன், ரூ.15 கோடி ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.

error: Content is protected !!