நோக்கியாவை மைக்ரோசாப்ட் 48,000 கோடி ரூபாய் விலைக்கு வாங்குகிறது!

நோக்கியாவை மைக்ரோசாப்ட் 48,000 கோடி ரூபாய் விலைக்கு வாங்குகிறது!

செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்குகிறது. 7.2 பில்லியன் டாலருக்கு (48,000 கோடி) நோக்கியாவை மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்குகிறது. செல்போன் விற்பனையில் உலகில் முதலிடத்தில் இருந்த நோக்கியா மொபைல் போன்களை ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் நிறுவனங்கள் பின் தள்ளிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
sep 3 nokia-microsoft-logo
ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களை சமாளிப்பதற்காக 2011ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன் சாப்ட்வேரை நோக்கியா மொபைலில் இயக்கியது. ஆனால் இது பெரிய அளவில் விற்பனையை அதிகரிக்கவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஒப்பந்தம், 2014-ம் முதல் காலாண்டில் முடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் நோக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனரான ‘ஸ்டீபன் எலோப்’ மீண்டும் மைக்ரோசாப்டிலேயே இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இவர் மைக்ரோசாப்டில் இருந்து தான் நோக்கியாவுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எங்களது சாதனங்கள் மற்றும் சேவைகளை, மைக்ரோசாப்ட் மற்றும் எங்களின் கூட்டாளர்கள் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த வாய்ப்புகளை வலுப்படுத்துகிறது. இந்த பெரிய குழுக்கள் போன்களில் இணைந்து மைக்ரோசாப்ட் பங்கினை மற்றும் லாபத்தை விரைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று நோக்கியா நிறுவனம் கூறியுள்ளது. சீனியர் எக்ஸ்கியூட்டீவ் ஜோ ஹார்லோ, ஜீஹா புட்ரன்டா, டிமோ டோய்க்கனேன், மற்றும் கிரிஸ் வெபர் ஆகியோரா ஒப்பந்தம் முடிவிற்கு வந்த பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மாற்ற உள்ளனர். ஆனால் அவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் எந்த பதவியில் இருப்பார்கள் என்று தகவல் வெளியாகவில்லை.

Microsoft buys Nokia’s devices unit in 7.2 billion bid
*********************************************************************
Beleaguered Finnish company Nokia announced on Tuesday the sale of its mobile phone unit to Microsoft for 5.44 billion euros ($7.17 billion), bringing an end to its days as a phone maker.Nokia will grant the US software giant a 10-year non-exclusive licence to its patents and will itself focus on network infrastructure and services, which it called “the best path forward for Nokia and its shareholders.”

error: Content is protected !!