நிஜத்தில் நடந்த ‘சென்னையில் ஒரு நாள்’

நிஜத்தில் நடந்த ‘சென்னையில் ஒரு நாள்’

தமிழகத்தில் 2008 அக்டோபரில் ஹிதயேந்திரன் உடல் உறுப்பு தானம் செய்தது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில் அந்த மாதமே மாநில அரசு மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை அரசு தொடங்கியது.இதுவரை மூளைச்சாவு நிலையை அடைந்த 482 பேர் உடல் உறுப்புகளை தானம் கொடுத்துள்ளனர். கிட்னி 861; இதயம் 76; நுரையீரல் 37; கல்லீரல் 440; கணையம் 1 என 1,415 முக்கிய உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன. இதுதவிர இதய வால்வுகள் 500; விழித்திரை 730, தோல் 4 என மொத்தம், 2,649 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன.’இந்தியாவில் தமிழகம் தான் உடல் உறுப்பு தானத்தில் முதல் இடத்தில் உள்ள நிலையில் மூளைச்சாவு அடைந்த மதுராந்தகம் வாலிபரின் இதயம், மும்பையைச் சேர்ந்த பெண்ணுக்கு வெற்றிகரமாக பொறுத்தப்பட்டது.
heat on road
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பழையனூர் யாதவர் தெருவை சேர்ந்த வர். லோகநாதன் (27). இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். வீட்டில் பெற்றோருக்கு பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, தனியார் வாகனத்தில் டிரைவராக வேலை பார்த்துள்ளார்.இந்நிலையில், கடந்த 11ம் தேதி இரு சக்கர வாகனத்தில் அவர் சென்றபோது எதிரே வந்த கன்டெய்னர் லாரி பயங்கரமாக மோதியது. இதில் லோகநாதன் பலத்த காயமடைந்தார்.இதனால் அவர் உடனடியாக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு என்று மருத்துவர்கள் பரிந்துரைத்ததால், அவர் உடனடியாக சென்னை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஜூன் 12ம் தேதி கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவரது நிலைமை மிகவும் மோசமானது.

மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில் லோகாநாதன் மூளையின் செயல்பாடு முற்றிலும் செயல் இழந்துவிட்டது. அதே சமயம், உடம்பில் சுவாசம் மற்றும் மற்ற பாகங்கள் இயங்கின. எனவே, லோகநாதனை நன்றாக பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமுறைப்படி, அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்று காலை 6.55 மணிக்கு அறிவித்தனர். இனி அவர் உயிர் பிழைக்கவும் முடியாது என்று தெரிவித்தனர்.குறிப்பாக, லோகநாதனின் அம்மா ராஜலட்சுமியை அழைத்த மருத்துவர்கள் இந்த தகவலை தெரிவித்தனர். ராஜலட்சுமி நர்சாக பணியாற்றி வருகிறார்.என் மகன் இந்த உலகில் இல்லையென்றாலும் பரவாயில்லை. அவன் உருவில் நான் மற்றவர்களை பார்த்து கொள்கிறேன் என்று கதறி அழுதபடி கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் அவரை தேற்றினர்.

உடனே ராஜலட்சுமி தன் மகனின் இதயம், கண்கள் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக மருத்துவர்களிடம் தெரிவித்தார். என் மகன் உயிருடன் இருந்தால் என் குடும்பம் மட்டும்தான் பயன்பெறும். ஆனால், அவனின் உடலை தானம் செய்வதின் மூலம் நிறையபேருக்கு அவர்களின் ஆயுட் காலம் முழுவதும் உபயோகமாக இருக்கும் என்று கூறினார்.இதையடுத்து சென்னையில் இதயம் மற்ற உறுப்புகள் கோரி பதிவு செய்தவர்களின் விவரங்களை சேகரித்தனர்.அப்போது, மும்பையை சேர்ந்த ஓய்வுபெற்ற மரைன் இன்ஜினியர் ஆஸ்பி பி மினோசெரோஜியன் 21 வயதான ஒரே மகள் ஹவோபி, கடந்த 4 ஆண்டுகளாக இதய கோளாறில் அவதிப்பட்டு வந்தார். இதற்காக இவரது பெற்றோர் பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. இதனால், அவரை அமெரிக்கா கொண்டு செல்ல முடிவு செய்தனர்.அமெரிக்க டாக்டர்களை தொடர்பு கொண்டபோது, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் இதய மாற்று சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது என்று கைவிரித்துவிட்டனர்.

ஹவோபிக்கு இதய மாற்று சிகிச்சை அளிக்கா விட்டால் இன்னும் 3 அல்லது 4 மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இதனால், ஹவோபி பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.எனினும் மனம் தளராத மினோசெரோஜி தனது மகளை அடையாரில் உள்ள போர்ட்டிஸ் மலர் மருத்துவ மனையில் ஒரு மாதத்திற்கு முன்பு சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்த விவரங்கள் சென்னை அரசு மருத்துவமனையில் உள்ள லோகநாதனின் அம்மா மற்றும் மருத்துவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், மினோசெரோஜிக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக லோகநாதனின் பெற்றோரிடம் பேசினார். மருத்துவர்களிடமும் தெரிவித்தார்.தன் இறுதி நாளை எண்ணிக் கொண்டிருக்கும் ஹவோபியை தன் மகனின் இதயத்தைக் கொடுத்து காப்பாற்ற லோகநாதனின் பெற்றோர் கனத்த இதயத்துடன் முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லோகநாதன் இதயத்தை அடையார் மலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹவோபிக்கு பொருத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.இதயத்தை ஆபரேஷன் செய்து அகற்றுவது. அதை குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்ப்பது, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.சென்னை அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த லோகநாதனின் உடலில் இருந்து ஆபரேசன் மூலம் இதயம் உள்பட உடல்பாகங்களை வெட்டி எடுத்து வெற்றிக் கரமாக பொருத்தப் பட்டது

error: Content is protected !!