நாளை முதல் வானில் நிலா+நிலா=இரண்டு நிலா!

நாளை முதல் வானில் நிலா+நிலா=இரண்டு நிலா!

வானில் நாளை முதல் 2 நிலவுகள் தெரியும் என அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை வெறும் கண்ணால் நம்மால் பார்க்க முடியாது என்றும், வானில் உள்ள கோள்களை பார்க்க பயன்படுத்தப்படும் சிறப்பு தொலைநோக்கிகள் கொண்டு பார்க்க முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
அதாவது, வானில் நிறைய விண்கற்கள் புவி ஈர்ப்பு விசைக்கு அப்பால் சுழன்றுகொண்டு இருக்கின்றன. அதில் ஏதேனும் ஒரு விண்கல் அவ்வப்போது புவி ஈர்ப்பு விசைக்குள் கட்டுப்பட்டு சில நாட்கள் புவி வட்டப்பாதை நோக்கி சுழலும். அம்மாதிரியான நிகழ்வு தான் தற்போது நடைபெற்றுள்ளது.

புவி ஈர்ப்பு விசைக்குள் கட்டுப்பட்டு, ஒரு புதிய விண்கல் தற்போது புவி வட்டப்பாதை நோக்கி வந்துள்ளது. இதற்கு ‘ 2024 PT5 ‘ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கல்லானது, நாளை (செப்டம்பர் 29) முதல் நவம்பர் 25ஆம் தேதி வரையில் புவி வட்டப்பாதை நோக்கி வரும் இருக்கும் என்றும், அதற்கடுத்து புவி ஈர்ப்பு விசையில் இருந்து விலகிவிடும் என்றும் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வானியல் ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, 2024 PT5 ஆனது சூரிய ஒளிபட்டு பூமியின் தற்காலிக ‘மினி நிலவு’ போல காட்சியளிக்கும் என கூறியுள்ளனர். மேலும், இதனை வெறும் கண்ணாலோ, நமது சாதாரண தொலைநோக்கி உதவியுடனோ பார்க்க முடியாது. அந்த சிறிய விண்கல் அளவு மிகசிறியது என்பதால் அதற்கென உள்ள விண்வெளி தொழில்முறை உபகரணங்களால் மட்டுமே பார்க்க முடியும்.

இது பற்றி அமெரிக்க வான்வெளி ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜெனிஃபர் மில்லார்ட் கூறுகையில் , இது நமது கிரகத்தை எந்த விதத்திலும் பாதிக்கப்போவதில்லை. அதன் சுற்றுப்பாதை தற்போது மாறியுள்ளது. பு ஈர்ப்பு விசையில் இருந்து நகர்ந்தவுடன் நமது கிரகத்தின் சுற்றுவட்ட பாதை நோக்கிய பாதையில் இருந்து நகர்ந்து அதன் வழக்கமான வழியில் தனது பயணத்தை தொடரும். தொழில்முறை தொலைநோக்கிகள் கொண்டு மட்டுமே அதனை பார்க்க முடியும். ” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இம்மாதிரியாக மினி நிலவுகள் தோன்றுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, கடந்த 1981 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் வானில் தோன்றியுள்ளது. கடந்த 2022 இல் தோன்றிய ‘ NX 1 ‘ என பெயரிடப்பட்டது. நாளை தோன்றும், ‘ 2024 PT5 ‘ மீண்டும் 2055இல் பூமியின் சுற்றுப்பாதைக்குத் திரும்பும் என்றும் வானியல் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

error: Content is protected !!