நடிகர் நகுல் – ஸ்ருதி திருமண ஆல்பம்
நடிகை தேவயானியின் தம்பியும், நடிகருமான நகுல்,- ஸ்ருதி திருமணம் இன்று (28-02-2016, ஞாயிறு) காலை சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை ஹால் கல்யாண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 10.41க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.
நடிகை தேவயானிக்கு மயூர், நகுல் ஆகிய 2 தம்பிகள் இருக்கிறார்கள். தேவயானி டைரக்டர் ராஜகுமாரனை காதல் திருமணம் செய்து கொண்டது போல், அவருடைய மூத்த தம்பி மயூரும் காதல் திருமணம் செய்து கொண்டார். இப்போது அவர் மனைவி குழந்தையுடன் புனாவில் வசித்து வருகிறார்.இளைய தம்பி நகுல்,’காதலில் விழுந்தேன்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். ‘மாசிலாமணி,’ ‘கந்த கோட்டை,’ ‘நான் ராஜாவாக போகிறேன்,’ ‘வல்லினம்’ ஆகிய படங்களிலும் நகுல் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அடுத்து இவர் நடித்துள்ள ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற புதிய படம், வெள்ளிக்கிழமை திரைக்கு வர இருக்கிறது.
இதனிடையே நகுலும் கடந்த 4 வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். சென்னையை சேர்ந்தவர் அந்த ஸ்ருதி என்ற.பெண் ‘எம்.பி.ஏ.’ படித்து முடித்து விட்டு. ஆரம்பத்தில், ஒரு நட்சத்திர ஓட்டலில் சமையல் கலை நிபுணராக பணிபுரிந்து வந்தார்.பின்னர் வீட்டிலேயே கேக் ,இனிப்புகளை தயார் செய்து விற்பனை செய்கிறார். நகுல் தன் ப்ரண்ட ஒருவரைப் பார்க்கப் போன இடத்தில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஸ்ருதியுடன் .அறிமுகமாகி அந்த. நட்பு காதலாகி, திருமணத்தில் முடிந்துள்ளது