திருமணம் செய்து வைக்காத பெற்றோர் மீது வழக்கு = மகள்களின் அதிரடி போக்கு

திருமணம் செய்து வைக்காத பெற்றோர் மீது வழக்கு = மகள்களின் அதிரடி போக்கு

பிள்ளைகளுக்கு காலாகாலத்தில் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால், அவர்களின் கோபத்துக்கும், அதிருப்திக்கும் பெற்றோர்கள் ஆளாக நேரிடும். சவுதி அரேபியாவில் உள்ள பெண்கள், ஒருபடி மேலே போய், பெற்றோர் மீது வழக்கே தொடர்ந்து விட்டனர். தங்களுக்கு இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை என்பதுதான் பெற்றோர் மீது அவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டு.
soudi women
திருமணங்களை முடிவு செய்வதற்கான சம்பிரதாயங்கள், முன்பெல்லாம் சுருக்கமானவை. கல்யாணத் தரகர்களிடம் ஒப்படைக்கப்படும் ஜாதகங்கள், ‘நல்ல வேலையில் இருக்கிற பையனா இருந்தா போதும்…’ என்று காத்திருக்கும் பெண் வீட்டார், ‘பொண்ணு அழகா இருக் கணும்…’ என எதிர்பார்க்கும் பையன் வீட்டார், பஜ்ஜி, காபியுடன் பெண் பார்க்கும் படலம், முகூர்த்தம்… இப்படி!இன்றோ, கல்யாண சந்தையில் பற்பல மாற்றங்கள். குறிப்பாக, பையன் வீட்டார் ‘டிமாண்ட்’ செய்வது போலவே, பெண் வீட்டாரின் ‘டிமாண்ட்’களும் இப்போது பெருகியுள்ளன. ‘பொண்ணு, பையனை விடப் படிச்சிருந்தா என்ன… நல்லதுதானே..?’ என்று மாப்பிள்ளை வீட்டார் மாறியிருக்க, ‘தனிக் குடித்தனம் வெச்சாதான் பொண்ணு கொடுப் போம்…’ என்று வெளிப்படையாகவே நிபந்தனை விதிக்கும் பெண் வீட்டார்கள், நவீன கல்யாண புரோக்கர்களாக உருவெடுத்து இருக்கும் மேட்ரிமோனியல் வெப்சைட்டுகள், மணக் கயிறின் மஞ்சள் தேயும் முன் பிரியும் தம்பதிகள்… என ரொம்பவே மாறி இருக்கின்றன கல்யாண காட்சிகள்.

இதனிடையேதான் சவுதி அரேபியாவில், ரியாத் நகரில் 11 வழக்குகளும், மதினா நகரில் 4 வழக்குகளும், தம்மம், மக்கா, ஜெட்டா, ஜசான் ஆகிய ஊர்களில் தலா 2 வழக்குகளும் இதுபோல் தொடரப்பட்டுள்ளன. இதைப் பார்த்த மனித உரிமை ஆர்வலர் ஒருவர், ‘குறிப்பிட்ட வயதை எட்டியவுடன், பெற்றோரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல், பெண்கள் தாங்களே திருமணம் செய்துகொள்வதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்’ என்று கூறினார்.

error: Content is protected !!