திருப்பதி போக பிளான் பண்றீங்களா? அப்ப இதைத் தெரிஞ்சுகங்க!

திருப்பதி போக பிளான் பண்றீங்களா? அப்ப இதைத் தெரிஞ்சுகங்க!

வாழ்வில் பல்வேறு திருப்பங்கள் கொடுக்கும் திருப்பதியில் பல மாற்றங்களை கொண்டு வருவதற்கு தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பக்தர்களின்‌ கூட்டத்தை கட்டுப்படுத்த சோதனை முறையில்‌ பிரம்மோற்சவம்‌, புரட்டாசி மாதம்‌ முடிந்து இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

பக்தர்கள் தரிசனத்தின்‌ போது, பல மணி நேரம்‌ ஒரே இடத்தில்‌ காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் நேர ஒதுக்கீடு முறையில் சர்வதரிசன டிக்கெட்‌ வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதே போல், திருப்பதியில்‌ தினமும்‌ 20,000 டிக்கெட்கள் கொடுக்கவும், ஒதுக்கீடு செய்த நேரத்தில்‌ திருமலை சென்று 2 மணி நேரத்தில்‌ தரிசனம்‌ செய்ய ஏற்பாடுகளும்‌ செய்யப்பட்டுள்ளதாக சொல்லபடுகிறது.

இரவில் தரிசனத்திற்காக பல மணி நேரம் மக்கள் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு, விஐபி தரிசனத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளது. அதன்படி‌ அனைத்து நாட்களிலும்‌ காலை 10 மணி முதல்‌ மதியம்‌ 12 மணி நேரம்‌ வரை மட்டுமே விஐபி தரிசனத்தில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பக்தர்கள் திருமலைக்கு வந்த பிறகு, அறைகள் பெற நீண்ட நேரம் காத்திருப்பதையும் தங்கும் அறை கிடைக்காமல்‌ தவிப்பதையும் கருத்தில் கொண்டு இனி திருப்பதியிலேயே அறைகள்‌ ஒதுக்கீடு செய்து, ரசீது வழங்கி திருமலைக்கு அனுப்பும்‌ திட்டம்‌ செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அனைத்து மாற்றங்களும் பிரம்மோற்சவம் மற்றும் புரட்டாசி மாதம் முடிந்த பிறகு சோதனை முறையில் நடைமுறைப்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

Related Posts