தமிழ்நாடு போலீசாருக்கு இலவச சிம்!

தமிழ்நாடு போலீசாருக்கு இலவச சிம்!

தமிழக காவல் துறையில் எஸ்பி, ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஆகிய உயர் அதிகாரிகளுக்கு தகவல்களை பரிமாறிக் கொள்ள இலவசமாக செல்போன்கள் வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது அனைத்து பிரிவு காவலர்களுக்கும் இலவச சிம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு காவலருக்கும் பி.எஸ்.என்.எல் சிம் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மற்ற காவல் நிலையம் மற்றும் காவலர்களுடன் இலவசமாக பேசலாம். காவலர்களுக்கு கொடுக்கும் சிம் கார்டுகளுக்கு பில் தொகையை அரசே ஏற்று கொள்ளும்.
BSNL-Logo_
இது பற்றி காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது பணிகளை விரைந்து முடிக்கவும், குற்றங்களை விரைந்து கண்டுபிடிக்கவும், அனைத்து காவல் நிலையம், காவல் அதிகாரிகளையும் ஒருங்கிணைப்பதற்கு இது உதவியாக இருக்கும் என்றார். இதுதவிர ஒவ்வொரு காவலருக்கும் 7 சிம்கார்டு கொடுக்கபட உள்ளது. இந்த சிம்கார்டுகளை அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். ஆனால் இதற்கு ஆகும் தொகையை அவரவர் செலுத்தி கொள்ள வேண்டும். முன்பு காவலர்கள் அலுவலக வேலைக்களுக்கு சொந்த செல்போனையே பயன்படுத்தி வந்தனர். இந்த புதிய புதிய திட்டம் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கீழ் உள்ள காவலர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

error: Content is protected !!